சிலப்பதிகாரக் காட்சிகள்/கண்ணகி வழக்குரைத்தல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

11. கண்ணகி வழக்குரைத்தல்

கோப்பெருந்தேவி கண்ட கனவு

பாண்டியனை ஆடு அரங்கத்தில் விட்டுச்சென்ற அரச மாதேவி தன் பள்ளியிற் படுத்தான்; ஒரு கனவு கண்டாள், அவள் கனவில், பாண்டியனது வெண்கொற்றக் குடையும் செங்கோலும் தரையில் விழக் கண்டாள்; அரண்மனை வாயிலில் கட்டியிருந்த மணியின் குரல் அதிரக் கேட்டாள்; எட்டுத்திசைகளும் அதிரக் கண்டாள்; சூரியனை இருள் விழுங்கக் கண்டாள்; இரவில் இந்திர வில் வானத்தில் தோன்றக் கண்டாள்; பகலில் விண்மீன் விழக் கண்டாள்; இக்கொடிய காட்சி, பாண்டியனுக்கு வர இருக்கும் துன்பத்தை அறிவிப்பது என்பதை உணர்ந்தாள்.

அரசி அரசனைக் காணல்

அரச மாதேவி, தான் கண்ட கனவினைத் தன் தோழியர்க்குக் கூறினாள்; உடனே அரசனைச் சென்று காணப் புறப்பட்டாள்; பணிப்பெண்கள் கண்ணாடி உறர்ந்தபட்டாடைகள், துரபவகைகள் தீபவகைகள், சந்தனம் முதலிய மணமிகுந்த கலவைச் சாந்துகள், பலவகை மலர் மாலைகள், விசிறிகள் முதலிய பலவகைப் பொருள்களைத் தட்டுகளில் ஏந்தியவராய் அரச மாதேவியுடன் சென்றனர்; அரசனது இருப்பிடத்தை அடைந்ததும் அப்பொருள்களை வைத்துவிட்டு அகன்றனர்! அரச மாதேவி, அரசனிடம் தான் கண்டதீக் கன வினைப் பற்றிக் கூறத் தொடங்கினாள்.

அரண்மனை வாயிலில் கண்ணகி

அச்சமயத்தில் கோப ஆவேசங் கொண்ட கண்ணகி கண்களில் தீப்பொறி பறக்க அரண்மனை வாயிலை அடைந்தாள்; அங்கு இருந்த வாயிற் காவலனை உறுத்து நோக்கி,"அரண்மனை வாயிற் காவலனே, அறிவு அற்று முறை தவறிய அரசனது அரண்மனை வாயிற்காவலனே. ஒற்றைச் சிலம்பைக் கையிலேந்தியவளும், கணவனை இழந்தவளும் ஆகிய ஒருத்தி நின்னைக் காண வேண்டும் என்கிறாள் என்பதனை தின் அரசனுக்ரு அறிவிப்பாயாக", என்றாள்.

காவலன் கலக்கவுரை

காவலன் அவளுடைய தீப்பொரி பறக்கும் கண்களையும் கார்மேகம் நிலத்திற் படிந்ததுபோலச் சோர்ந்து நிலத்தின் மீது புரளும் கருங்கூந்தலையும். சோகரசம் பொருந்திய முகத்தையும் துடிதுடிக்கும் உதடுகளையும் நடுங்கும் கைகளையும் கண்டு. அஞ்சினான். உடனே அரண்மனைக்குள் ஒடினான்; அரசனைக் கண்டு அடிப்பணிந்தான்; “அரசே, நின்கொற்றம் வாழ்க! கொற்கைவேந்தே, வாழ்க பொதியமலைத் தலைவனே வாழ்க! பழியற்ற பெருமானே, வாழ்க! நமது வாயிலில் இள மங்கை ஒருத்தி வந்து நிற்கின்றாள். அவள் எருமைத்தலை அசுரனைக் கொன்ற கொற்றவை. அல்லள்; ஏழு தேவதைகளில் ஒருத்தியாகிய பிடாரி. அல்லள், சிவபிரானை நடனம் செய்வித்த பத்திர காளி அல்லள், அச்சம் தரத்தக்க காட்டையேதான். வாழ் இடமாகக் கொண்ட காளி அல்லள்; தாருகன் என்று அசுரன் பெரிய மார்பைக் கிழித்த பெண்ணும் அல்லள்; அவள் மிக்க கோபம் உடையவள் போலவும் மாற்சர்யம் உண்டயவள் போலவும் காணப்படுகிறாள். அழகிய பொன் வேலைப்பாடு அமைந்த சிலம்பு ஒன்றைக கையில் பிடித்திருக்கிறாள். அவள் தன் கணவனை இழந்தவளாம். நின்னைக் காண வந்திருக்கிறாள், மன்ன, நினது. வாழ்நாள் சிறப்பதாகும்!” என்று கூறிப் பணிந்தான்.

அரசன் முன் கண்ணகி

பாண்டியர் பெருமானான நெடுஞ்செழியன் “அப்படியா! அவளை இங்கே வரவிடு” என்றான். உடனே காவலன் காற்றெனப் பறந்து, கண்ணகியைக் கண்டு, “தாயே, வருக” என்று உள்ளே அழைத்துச் சென்று, அரசி முன்னர் நிறுத்தி மீண்டான்.

தன்னை அறிவித்தல்

அரசன் கண்ணகியைக் கனிவுடன் நோக்கி, “அம்மையே, கண்களில் நீர் சொரிய, மிகுந்த துக்கம் உடையவளாய் இங்கு வந்து நிற்கும் நீ யார்?” என்று கேட்டான் உடனே கண்ணகிக்கு அடக்க முடியாத கோபம் வந்தது. அவள், ஆராய்ச்சி அறிவு அற்ற அரசனே, ஒரு புறாவினுக் காகத் தன் உயிர் கொடுத்த சிபி ம், ஒரு பசுக் கன்றுக்காகத் தன் ஒரே மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மதுச்சோழனும்:ஆண்ட பூம்புகார் எனது பிறப்பிடம் ஆகும். யான் அப்பகுதியில் புகழ்பெற்ற வணிக அரசனான மாசாத்துவானுக்கு மகனாக விளங்கி, இன்று உன்னால்கொல்லப்பட்ட கோவலன் என்பவனுக்கு மனைவி ஆவேன். என் பெயர் கண்ணகி என்பது.” என்றாள்.

கண்ணகி வழக்குரைத்தல்

மன்னவன் மங்கை உரைத்ததை மன வுருக்கத் தோடு கேட்டு, “அம்மே, கள்வனைக் கொல்லுதல் கொடுங்கோல் ஆகாதே. அதுதானே செங்கோல் வேந்தர் செய்யத் தகுவது.” என்றான். உடனே கண்ணகி, “அரசே என் கணவன் கள்வன் அல்லன். அவன் என் கால் சிலம்புகளில் ஒன்றை விற்கவே வந்தான்; அதனை விற்று வரும் பணத்தை வாணிக முதலாகக் கொண்டு வாணிகம் செய்ய வந்தான் ; நீ தீர விசாரியாமல் அவனைக் கொலை செய்யக் கட்டளையிட்டனை இதோ. இருக்கிறது எனது மற்றொரு சிலம்பு. மாணிக்க பரலையுடைய சிலம்பு” என்றாள்.

அரசன், “அப்படியா! உனது சிலம்பு மாணிக்கப் பரலை உடையதா? எங்கள சிலம்பு முத்துப் பரலை உடையது அன்றோ? உன் சிலம்பை உடைத்துக் காட்டு, பார்ப்போம்,” என்றான். உடனே கண்ணகி தான் வைத்திருந்த சிலம்பை உடைத்தாள். அதனுள் இருந்த மாணிக்கமணிகள் வெளியே சிதறின. அவற்றுள் ஒன்று அரசே நீ இனிப் பேசுவதில் பயனில்லை; நீ தோற்றனை: வாயை மூடு” என்று சொல்வது போல மன்னவன் வாயில் தெறித்தது.

மன்னவன் மயக்கம்

மன்னவன் பாணிக்க மணிகளைக் கண்டான்: திடுக்கிட்டான். ஆவி சோர்ந்தான்; “ஐயோ பொற் கொல்லன் வாய்மொழியை நம்பிக் குற்றமற்ற இளைஞனைக் கொலை செய்யக் கட்டளையிட்ட நானோ அரசன்! நானே கள்வன், குடிகளைக் கண் னெனக் காத்துவந்த பாண்டியர் மரபுக்கு என் செயலால் கெட்ட பெயர் உண்டாற்றே! எனது ஆயுள் கெடுவதாகுக!” என்று வருந்திக் கூறி அரியணையிலிருந்து மயங்கி வீழ்ந்தான்.

கண்ணகி வஞ்சினம்

அரசன் வீழ்ந்ததைக் கண்ட கோப்பெருந்தேவி நிலைகுலைந்து, “உலகில் பெற்றோர் முதலிய உற வினரை இழந்தவர்க்குப் பிறரை அங்ஙனம் காட்டி ஆறுதல் கூறலாம். ஆயின், கணவனை இழந்தோர்க்குக் காட்டத்தக்கபொருள் உலகத்தில் இல்லையே!” என்று கூறி வீழ்ந்த மன்னன் அடிகளைத் தன் கைகளால் பற்றி மூர்ச்சித்தாள்.

இக்காட்சிகளைக் கண்டும் கண்ணகிக்குச் சீற்றம் தணியவில்லை. அவள், வீழ்ந்த அரசியைக் கண்டு, “அம்மையே, நான் பத்தினிமார் பிறந்த பதியிற் பிறந்தவள். நான் ஒரு பத்தினி என்பது உண்மையாயின், இந்த அரசனுடன் மதுரையை யும் அழிப்பேன்,” என்று வஞ்சினம் கூறினாள்.