உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/123

விக்கிமூலம் இலிருந்து


123அப்பா! மண்ணெண்ணெய்பைக் கரியடுப்பைப் பற்றவைக்க உபயோகித்தாலும் கரியடுப்பைப் பற்றவைத்தபின் உபயோகிக்கக்கூடாது என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! கரியடுப்பைப் பற்றவைக்கக்கூட மண்ணெண்ணெய் உபயோகிக்க வேண்டியதில்லை. மண்ணெண்ணெய் திரிமூலம் ஆவியாக வந்து எரித்தால்தான் அதன் புகை நமக்குக் கெடுதல் செய்யாது. அப்படிக்கின்றி துணியில் மண்ணெண்ணெய்யைத் தோய்த்துக் கரியடுப்பைப் பற்ற வைக்கும்பொழுது மண்ணெண்ணெயப் புகை அதிகமாக உண்டாகி நமக்குக் கேடுசெய்யும். கரியடுப்பில் கழிவு கடுதாசிகளை சிறிது சிறிதாகக் கிழித்து கரிக்கு அடியே கொஞ்ச கொஞ்சமாக எரித்தால் கரி சீக்கிரம் தணல் ஆய்விடும்.

கரியடுப்பைப் பற்றவைக்க மண்ணெண்ணெய்யைத் துணியில் தோய்த்துப் பற்றவைத்தாலும் அல்லது கரிகளின் மீது ஊற்றிப் பற்றவைத்தாலும் மண்ணெண்ணெய் ஆவி உடனுக்குடன் எரிந்துவிடுகிறது. அதனால் அபாயகரமான தீச்சுடர் உண்டாவதில்லை. ஆனால் கரி எரிந்துகொண்டிருக்கும் பொழுது அந்தத் தணலின்மீது மண்ணெண்ணெய்யை ஊற்றினாலும் அப்பொழுது அதிகமான ஆவி உண்டாகி விடுகிறது. அது காற்றுடன் சேர்ந்து பெரிய சுடராக எரிந்து அபாயம் விளைவித்து விடுகிறது. அத்துடன் ஆவியும் காற்றும் சேர்ந்த கலவையில் தீப்பற்றினால் அது வெடிக்கும் தன்மையுடையது. அதனாலும் அபாயம் உண்டாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/123&oldid=1538326" இலிருந்து மீள்விக்கப்பட்டது