தந்தையும் மகளும்/184
Appearance
184அப்பா! நீர் யானைக்கு ரத்தமாக வேர்க்கும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! யானைக்கு அடுத்தபடி பெரிய மிருகம் அது தான். அது பகல் நேரத்தில் தண்ணிரிலேயே கிடக்கும். பத்து நிமிஷ நேரங்கூட அது தண்ணீருக்குள் மூழ்கியிருக்கமுடியும். அப்பொழுது அது தன்னுடைய நாசித்துவாரங்களையும் காதுகளையும் மூடிக் கொள்ளும். அதற்கு ஏதேனும் நோவு உண்டாகுமானால் அப்பொழுது அதன் தோலில் சிவப்பு நிறமான வேர்வை முத்து முத்தாக உண்டாகும். நீர் யானைக்கு ரத்தமாக வேர்க்கும் என்று சொல்வது அதைக் கொண்டு தான். ஆனால் அது சிவப்பு நிறமாயிருந்த போதிலும் ரத்தமன்று. ஒருவிதமான எண்ணெய் வஸ்துவேயாகும்.