தந்தையும் மகளும்/185

விக்கிமூலம் இலிருந்து


185அப்பா! மனிதர்களைத் தவிர வேறு எந்தப் பிராணியாவது சிரிப்பது உண்டா?

அம்மா! மற்றப் பிராணிகளிடம் காணப்படாமல் மனிதர்களிடம் மட்டும் காணப்படும். விசேஷ குணங்களுள் ஒன்று சிரிப்பு என்பது என்று கூறுவார்கள். ஆயினும் கழுதைப் புலி என்று ஒரு காட்டு மிருகம் இருக்கிறது. அது மற்ற மிருகங்கள் கொன்று தின்றுவிட்டு மீதியாக விட்டுப் போகும் பிணங்களைத் தின்னும் வழக்க முடையதாக இருப்பதால் அதைக் காட்டிலுள்ள தோட்டி என்று கூறுவதுண்டு. அது சப்தம் போடுவது பைத்தியக்காரன் சிரிப்பது போலிருக்குமாம். கேட்க பயங்கரமாக இருக்குமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/185&oldid=1538644" இலிருந்து மீள்விக்கப்பட்டது