தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/018-066

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சிலப்பதிகார வெளியீடு

அதன் பிறகு சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து வெளியிடவேண்டுமென்ற எண்ணம் ஆசிரியருக்கு உண்டாயிற்று. தம்முடைய கையிலிருந்த ஏடுகளை எல்லாம் ஒப்புநோக்கி ஆராய்ச்சிபண்ணினார். அடியார்க்கு நல்லார் உரை அந்த நூலுக்கு உண்டு. அவர் உரை

எல்லாக் காதைகளுக்கும் இல்லை. அரும்பத உரை என்பது ஒன்று கிடைத்தது. அதை வைத்துக்கொண்டும் அங்கங்கே பலவற்றுக்குப் பொருள் செய்துகொண்டார். மேலும் சில ஏடுகள் கிடைக்கலாமோ என்ற எண்ணத்தில் 1891-ஆம் வருடம் கோடை விடுமுறையில் திருநெல்வேலி மாவட்டத்தை அடைந்து ஆங்காங்குள்ள பல சைவர்களுடைய வீடுகளில் தேடினார். இந்தப் பெரும் முயற்சியில் ஒன்றிரண்டு சிதிலமான ஏட்டுச் சுவடிகள் கிடைத்தன. கிடைத்தவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு மேலும் சிலப்பதிகாரத்தை நன்றாக ஆராய்ந்து அச்சிடத் தொடங்கினார்.