திருவாசகம் சில சிந்தனைகள்-2
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
முதற் பதிப்பு: டிசம்பர், 1999 உரிமை : ஆசிரியர்க்கு
விலை : ரூ. 75.00
- TITLE : THIRUVASAGAM - SILA
SINTHANAIGAL - 2
- AUTHOR : Prof. A.S.GNANASAMBANDAN
- LANGUAGE : TAMIL
- EDITION : First Edition, December, 1999
- No. OF PAGES : viii -+- 398 = 406
- PUBLISHED BY : GANGAI PUTHAKA NILAYAM,
13, DEENADAYALU STREET,
THYAGARAYA NAGAR
CHENNAI-600 017,
- PRICE : Rs. 75.00
PS. SP. Meyappan & Co. Chennai - 17 ☎ : 8251093
என்னைவிடப் பல்லாண்டுகள் மூத்தவர்களாயினும்,
1932ஆம் ஆண்டு முதல் என்னோடு நெருங்கிப் பழகி,
என்னை மகனாகவே பாவித்து,
தேவை ஏற்பட்டபோதெல்லாம்
என் வாழ்க்கையைத் திசை திருப்பியவர்கள் இருவர்.
மனத்திற்பட்டதை
மேடையில் அஞ்சாமல் கூற ஊக்கம் தந்தவரும்,
திருவாசகத்திற்கு என்போக்கில் உரைகாணவேண்டும்
என்று என்னைத் தூண்டியவரும்
தமிழ்த் தென்றல்
திரு. வி. கலியாணசுந்தரனார்
அவர்களே ஆவார்.
ஆன்மீகத் துறையில் என்னை உந்திச் செலுத்தி, தம்
பூத உடலை நீத்த பிறகும். இன்றும் அத்
துறையில் என்னை வழிநடத்திச் செல்பவர்
பல்கலைச் செல்வர்
டாக்டர். தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்
அவர்களே ஆவார்.
இந்த இரு மகான்களுக்கும் மிக்க பணிவன்புடன்
இந் நூலைப் படையல் செய்து
அவர்களின் ஆசியை வேண்டி இறைஞ்சுகின்றேன்.
அ. ச. ஞானசம்பந்தன்
1950ஆம் ஆண்டில் தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்கள், திருவாசகத்தை விஞ்ஞானக் கண்கொண்டு பார்த்து நான் ஓர் உரை காணவேண்டுமென்று பலமுறை துண்டினார்கள். அத்தோடு நில்லாமல் தம்முடைய வாழ்க்கைக் குறிப்பில் என்னைப்பற்றி எழுதிய பகுதியிலும் இக் கருத்தை வெளியிட்டிருந்தார்கள். ஏனைய பக்தி நூல்களினின்றும் திருவாசகம் மாறுபட்டது. இந்நூல் ஓர் இறையன்பரின் அனுபவப் பிழிவு என்ற கருத்தைத் தொடக்கத்திலிருந்தே கொண்டிருந்தேன். வாலாயமாகக் கூறும் பதவுரை, பொழிப்புரை முதலியன இந்நூலுக்கு ஏற்றதல்ல என்ற கருத்தும் என் மனத்தில் வலுவாக இடம் பெற்றிருந்தது. அன்றியும், திருவாசகத்தைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் ஓர் அச்சஉணர்வு தோன்றியமையால் இம்முயற்சியில் அப்போது ஈடுபடவில்லை.
தமிழ்த் தென்றல் அவர்கள் கூறி நாற்பத்தொன்பது ஆண்டுகள் கழித்து திடீரென்று சில எண்ணங்கள் மனத்தில் தோன்றலாயின. இந்த எண்ணங்களும், அவற்றைத் தோற்று விக்கும் திருவாசக அடிகளும் அடிக்கடி படம்போல் மனத்தில் தோன்றி மறைந்தன. திருவாசக அடிகள் இந்த எண்ணங்களைத் தோற்றுவித்தன என்பது உண்மைதான். ஆனால் அச்சொற்கள், அவை குறிக்கும் பொருள்கள் என்பவை நேரடியாக இவ் எண்ணங்களைத் தோற்றுவிக்க வில்லை. அதன் மறுதலையாக, அச்சொற்கள் குறிப்புப் பொருளாக (suggestion) இவ் எண்ணங்களைத் தோற்று வித்தன. அவ் எண்ணங்களுக்குக் கோவையாக ஒரு வடிவு கொடுக்கும் ஆற்றல் என்பாலில்லை. எனவே, சில அடிகளைப் படித்தவுடன் அத் தொடர்கள் என் மனத்தில் என்ன எண்ணங்களைத் தோற்றுவித்தனவோ அவற்றை அப்படியே கூறியுள்ளேன். இவ்வாறு சொல்வதற்குத் தொல்காப்பியத்தில் வரும் 'இறைச்சி' என்ற சொல் வலிவு தந்தது.
அனுபவத்திற்கு வடிவு கொடுக்கும் திருவாசகப் பாடல்கள் ஒரு கோவையாக, ஒரு வரன்முறைக்கு உட்பட்டு வருமென்று சொல்வதற்கில்லை. கோவையும், வரன் முறையும் வேண்டுமானால், அங்கே அறிவு தொழிற்பட வேண்டும். அறிவு தொழிற்படத் தொடங்கினால், உணர்வு குறையத் தொடங்கிவிடும்.
இக்கருத்துக்களை மனத்தில் கொண்டு ஒரு அடியையோ, சில அடிகளையோ அவ்வப்பொழுது படிக்கச் சொல்லிக் கேட்கும்போது என்ன சிந்தனைகள் மனத்தில் தோன்றினவோ அவையே இங்கு இடம் பெற்றுள்ளன. இச்சிந்தனைகள் என்னுடைய அறிவின் துணைகொண்டோ, அறுபது வருட இலக்கியப் பயிற்சியின் விளைவாகவோ தோன்றியவை அல்ல.
யாழ்ப்பாணம் திரு. மார்க்கண்டு அவர்கள் இரண்டு அடிகளையோ, நான்கு அடிகளையோ படித்துக் காட்டிய உடன் அந்த விநாடி என் மனத்தில் தோன்றிய சிந்தனைகளே இங்கு இடம்பெற்றுள்ளன. அதனாற்றான், திருவாசகம் - சில சிந்தனைகள் என்று இந் நூலுக்குப் பெயரிடப்பெற்றுள்ளது. மணிவாசகர் அருள் இருப்பின் திருவாசகம் முழுமைக்கும் இதே முறையில் சிந்தனை களைத் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்.
திருச்சதகம் முதல் அம்மானை முடிய உள்ள இந்த நூலையும் என் வாய்மொழியைக் கேட்டு கைப்பட எழுதியவர் யாழ்ப்பாணம் திரு. ச. மார்க்கண்டு ஆவார். இவருக்கு என் நல்வாழ்த்துக்கள் பெரிதும் உரியனவாகும்.
எழுதி முடித்த பின்னர் ஒவ்வொரு வரியாகப் பார்த்து தடைவிடைகளை எழுப்பி ஒரு முழுவடிவம் பெறுமாறு செய்ததுடன் படிகளைத் திருத்தும் பணியையும் மேற்கொண்ட முனைவர். மா. ரா. போ. குருசாமி, இதய மருத்துவ நிபுணர் டாக்டர். ந. சிவராசன், இரயில்வேயில் மின்னியல் தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வுபெற்ற திரு. C. P. கெளரிசங்கர், திரு. ச. மார்க்கண்டு ஆகிய இந் நால்வர்க்கும் என் நல்வாழ்த்துக்கள் உரியன.
இவர்கள் நால்வரும் என்மாட்டுக்கொண்ட அன்பினால் இதனைச் செய்தார்கள் என்று கூறுவதைவிட திருவாசகத்தின்பால் அவர்கள் கொண்டுள்ள எல்லையற்ற ஈடுபாடே இதனைச் செய்யுமாறு துண்டிற்று என்பதே உண்மையாகும்.
வழக்கம்போல இதனை நன்முறையில் அச்சுக்கோத்துத் தந்த 'சிவசக்தி கணினி அச்சுக்கோப்பாளர்'களுக்கும் என் நல்வாழ்த்துக்கள் உரியன.
சிறப்பாக நூலை வெளியிட்ட 'கங்கை புத்தக நிலைய' உரிமையாளர் திரு. திருநாவு. இராமநாதன் அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள் உரியன.
அ.ச.ஞானசம்பந்தன்
சென்னை-83
டிசம்பர், 1999
1. | திருச்சதகம் - சில சிந்தனைகள் | 1 | ||||
2. | நீத்தல் விண்ணப்பம் - சில சிந்தனைகள் | 130 | ||||
3. | திருவெம்பாவை - சில சிந்தனைகள் | 191 | ||||
4. | திரு அம்மானை - சில சிந்தனைகள் | 264 | ||||
5. | பின்னுரை | 315 | ||||
6. | பாட்டு முதற்குறிப்பு அகராதி | 394 |