தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்/7. ஒடிப் பழகும்போது உண்டாகும் நன்மைகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

7. ஒடிப் பழகும்போது உண்டாகும் நன்மைகள்

ஒட்டப் பயிற்சியின் போது, உடலில் உண்டாகும் மாற்றங்களை நினைத்தாலே நெஞ்சம் மகிழும் நடந்தாலோ தேகம் குளிரும்.

ஓடுவது வேலையற்ற வேலை என்று சாடுபவர்கள் அநேகம். அவர்கள் விவரமற்றவர்கள். விவேகமும் இல்லாதவர்கள்.

ஓடுவது மனிதன் செய்யக் கூடிய காரியமா! அது மிருகங்களுக்குத் தேவை. மனிதர்களுக்கு அநாவசியம் என்று ஆர்ப்பரிப்பவர்கள் அநேகம். அவர்கள் மனிதத் தவளைகள். மனிதன் என்ற பெயரிலே உலவும் வாயில்லா ஜீவன்கள்.

ஒட்டம் வாழ்க்கையின் ஆரம்பம், ஓட்டத்தில் வெற்றி பெற்ற ஒரு ஜீவ அனுதான் உடல் எனும் உருவத்தைப் பெற்று, உயிர் என்ற ஜீவியத்தைப் பெற்று, உலா வந்திருக்கிறது! எப்படி?

தாயின் கர்ப்பப்பையை நோக்கி, தந்தை ஒருவனது வீரியம் மிகுந்த விந்திலிருந்து, 225 லட்ச அணுக்கள் 8 மணி நேர மாரதான் ஓட்டத்தை ஆடுகின்றன. எந்த ஜீவ அணு முந்திக் கொண்டு தாயின் கர்ப்ப முட்டையை முதலில் அடைகிறதோ, அதுவே அருமையான பரிசைப் பெறுகிறது. வாழ்க்கை என்ற உயர்ந்த உருவத்தைப் பெற்று, பெருமையடைகிறது.

ஆக, ஒவ்வொரு மனிதனின் ஆரம்பமே, முடிவில்லாத ஒட்டப் பந்தயமாகத் தானே இருக்கிறது. வெற்றி பெற்ற விந்தணுவின் வியூகமாக மாறி வந்த மனிதன், வாழ்க்கையில் ஒடுவதை, சாடிப் பேசுகிறான். என்றால், அவன் சரிந்து போகத் தொடங்கி விட்டான் என்பதாகத் தானே அர்த்தம் ஆகிறது.

ஒடியவர்கள், ஓடுகிறவர்கள் உயர்ந்த வாழ்வைப் பெறுகின்றனர். உன்னத மகிழ்ச்சியை அடைகின்றனர். ஒப்பற்ற நலமான தேகத்தைத் துய்க்கின்றனர். பிறந்ததன் பேரின்பத்தை எய்தி பெரு வாழ்வு வாழ்கின்றனர்.

ஒடுவதால் இவையெல்லாம் கிடைக்கும் என்று நீங்கள் சும்மா சொல்லுகின்றீர்கள். என்று நீங்கள் நினைக்கலாம். அல்ல . அல்ல ஆராய்ச்சியின் முடிவும் அன்றாட அனுபவமும் உண்மைத் தவிர, வெறெதையும் விளம்புவதில்லை.

கீழே காண்பவை எல்லாம் ஓட்டம் கொடுக்கும் ஊட்டங்கள். கவனமாகப் படியுங்கள், ஒட்டம் என்னும் காமதேனுப் பசு, கேட்பதையெல்லாம் தட்டாமல் தருகின்ற தனிப் பெருமையை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்! பிறகு? நீங்களே உங்களையறியாமல் ஒடத் தொடங்கி விடுவீர்கள். இடையிலே ஓடி விடாமல், படித்து முடித்த பிறகு ஓடுவீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

1. இரத்த அழுத்தம் குறைகிறது

நன்றாக ஓடும் போது, இரத்த ஓட்டம் விரிவடைகிறது. வேகம் பெறுகிறது. அதனால் அதிக இரத்த ஓட்டம் பெறுகிற இரத்தக் குழாய்கள் விரிவடைகிறது. பெரிதாகிறது. இரத்தம் ஒடும் வழி தங்கு தடையில்லாமல் அமைவதால், அங்கே இரத்த அழுத்தத்திற்கான சூழ்நிலை குறைகிறது.

புல்லடர்ந்த வாய்க்காலில் தண்ணீர் தேங்கித் தேங்கித் தானே ஒடும். அதுபோல, கொழுப்பு அடைந்திருக்கும் இரத்தக் குழாய்கள் அகலத்தில் சுருங்கிப்போவதால், இரத்தமும் தயங்கித் தயங்கி ஓடும். அதனால் இரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. அந்த நோய் வராமல் ஓட்டம் உதவுகிறது.

2. இரத்த அழுத்தம் குறைகிறது

இரத்தத்தில் உள்ள இரத்த செல்கள் எண்ணிக்கையில் அதிகமாகின்றன. இரத்தத்தின் நிறம் காட்டும் ஹீமோகுளோபின் அதிகமாகிறது. ஆகவே, இரத்தத்தின் தரம் மிகுதியாகி, தேகத்தை மேன்மை படுத்துகிறது.

ஏதாவது காயம் பட்டால் , உடலிலிருந்து வெளியாகும் இரத்தத்தை அதிகமாக வெளியிடாமல், உடனே உறைந்து கொள்கின்ற (Clot) சக்தியை இரத்தம் வளர்த்துக் கொள்கிறது,

3. இரத்தக் குழாய்களில் சிறை (Artery) எனும் பகுதியில் ஏற்படும் பலஹீனத்தைப் போக்குகிறது. இரத்த குழாய்களில் தங்கி வளர்கின்ற கொலஸ்ட்ரால் எனும் வேண்டாத கொழுப்புச் சக்தியைக் குறைத்து, இரத்தக் குழாய்களை வலிமைப்படுத்துகிறது.

4. இதயம் வலிமை பெறுகின்றது அதிகமாக உடலுக்கு இரத்தத்தை இறைக்கும் பணியில் ஈடுபடுகிற இதயமானது, அளவில் பெரிதாகவும் ஆற்றலில் வலிமையானதாகவும் வளர்ச்சியையும் எழுச்சியையும் பெறுகின்றது. இதயத்தைத் திறமுள்ளதாகவும், தரம் உள்ளதாகவும் மாற்றியமைக்கின்ற மந்திர சக்தியை ஒட்டம் அளிக்கிறது.

5. நுரையீரல்கள் நேர்த்தியான, நிறைவான நிலையினைப் பெறுகின்றன. நுரையீரல்கள் நிறைய உயிர்க்காற்றைப் பெறவும், அவசியமற்ற காற்றை அதிகமாக அகற்றிடவும் போன்ற பொறுப்பான பணியிலே சிறப்பான உச்சநிலையை எய்துகின்றன.

உயிர் காற்றின் சக்தியின் உன்னதத் தால், ஆஸ் த் மா, எம் பி சியா போனற நோய் கள் நொறுக்கப்படுகின்றன. நுண்மையான மேன்மையான ஆற்றலை நுரையீரல்கள் அடைகின்றன. 6. தசையின் விசைச் சக்தி மேம்பாடு அடைகிறது. நினைத்தவுடன் செயல்படும் தசைகளின் வேகத்தைத் தான் தசையின் சிறந்த இயக்கம் (Tone) என்பார்கள். அப்படிப் பட்ட அமைப்பைத் தசைகள் பெறுகிறபோது, தேகம், அழகாகவும், கவர்ச்சியாகவும் மாறிவிடுகிறது. அத்துடன், வேகம், வேலை ஆற்றல், விவேகம், மதியூகம் இவற்றையும் தசைத்திறன் வளர்த்து விடுகிறது.

7. எலும்புகளின் வலிமையை வைத்தே ஒருவரின் உடல் அமைப்பை, தோரணையை (Posture) தெரிந்து கொள்ளலாம். நிமிர்ந்து நிற்கும் ஆற்றல், நிமிர்ந்து நடக்கும் சுவர்ச்சி எல்லாம் வலிமையான எலும்புகள் இருக்கும் வரைதான் இருக்கும்.

8. உடலானது ஊளைச்சதைகளால் வளைக்கப்பட்டு உடலில் அதிக எடை விழுந்து, குண்டாகி, அவஸ்தைப்படுவதிலிருந்து ஒட்டம் காப்பாற்றுகிறது. ஒட்டம் கொழுப்பைக் கரைக்கிறது. செயல்களின் செழிப்பை மேலும் செழுமைப்படுத்துகிறது. செல்பிரிந்து வளரும் மெட் டபாலி சம் என ற தன் மை யை விரைவுபடுத்துகிறது. பசியைக் கட்டுப்படுத்தி பக்குவமானதாக உடலை பரிணமிக்க வைக்கிறது.

9. உணவை எளிதாக ஜீரணிக்கவும் , குடற்பகுதிகளின் ஆற்றலை வளர்க்கவும், உணவைக் கிரகித்து, குப்பைகளை விரைந்து வெளியேற்றவும் கூடிய வலிமையை ஒட்டம் வழங்குகிறது.

10. சோம்பலாக உள்ளவர்கள் தமக்குரிய வயதுக்கான தோற்றத்தைப் பெறாமல் விரைவாக முதுமை அடைந்து விடுகின்றார்கள். ஒட்டக்காரர்கள் வருடங்களில் வயதானாலும், உருவத்தில் வயதாகாத தோற்றம் கொண்டவர்களாக விளங்குகின்றார்கள். அதாவது உடற் பயிற்சி அளிக்கும் ஒட்டம் , வயதாவதை தாமதப்படுத்துகிறது.

11. சிந்தனைகளில் தெளிவு, எண்ணங்களில் எழுச்சி, நினைவாற்றல், நேர்த்தியான கற்பனைகள், தெளிவாக எதிலும் முடிவெடுககும் தேர்ச்சியை ஒட்டம் உண்டாக்கிவிடுகிறது.

12. எதற்கெடுத்தாலும், கவலைகள், சிறிய விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்படுதல, குழப்பம் அடைதல், கோபப்படுதல் போன்ற படப்படப்பான மனோ நிலையை கொஞ்சங் கொஞ்சமாக மாற்றி அமைத்து மனமாற்றத்தை அமைத்து, அமைதியான சூழ்நிலையின் ஆனந்தத்தை அனுபவிக்க உதவுகிறது.

13. காரணம் தெரியாமலேயே குழப்பம் கொள்பவர்களைவிட, களைப்படைபவர்கள் அதிகம் பேர்கள் உண்டு. இத்தகைய களைப்பு எதனால் உண்டாகிறது? உடல் தளர்ச்சியினால் தான்.

ஒட்டமானது இரத்த ஓட்ட மண்டலத்தைத் தூண்டி, விரைவாக செயல்பட வைக் கிறது. அதிகமான உயிர்க்காற்றை உள்ளுக்கு இழுக்கச் செய்து, உடல் முழுதிற்கும் அனுப்பி வைக்க உதவுகிறது. அதனால் சுறுசுறுப்பாகவும் சுய எழுச்சியோடும் நாள் முழுதும் இருந்திட ஒட்டம் உதவுகிறது.

14. நோய்கள் இல்லாத தேகமே இந்த உலகில் இல்லை என்பார்கள். உள்ளே அடங்கிக் கிடக்கும் நோய்கள், உடல் நோய் அடையும் நேரம் பார்த்து எழுச் சி யடைந் து, வேதனைப் படுத் த த் தொடங்கிவிடுகின்றன. ஆகவே, உடலை தளர்ச்சியடைய விடாமற்பார்த்துக் கொள்வது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகிறது.

தினந்தோறும் ஓடுகிற ஒட்டமும், செய்கிற உடற்பயிற்சியும் உயிர்க் காற்றை உள்ளிழுக்கும் ஆற்றலை அதிகப்படுத்தி, நோய்கள் தலையெடுக்காமல் தடுக்கின்றன. விரட்டுகின்றன. ஒழித்தும் விடுகின்றன.

பயங்கர நோய் களிலிருந்து காக்கின்ற பெருந்துணையாக ஓட்டம் உதவுகின்றது.

வாழ்விற்கு வளமான வழிகாட்டியாக விளங்கும் ஒட்டத்தில் நீங்களும் பங்கு கொள்ளலாமே!