தொல்காப்பியம்/எழுத்ததிகாரம்/மொழி மரபு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு
குற்றியலிகரம் நிற்றல் வேண்டும்
யா என் சினைமிசை உரையசைக் கிளவிக்கு
ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே. 1புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே
உணரக் கூறின் முன்னர்த் தோன்றும். 2நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்
குற்றியலுகரம் வல் ஆறு ஊர்ந்தே. 3இடைப்படின் குறுகும் இடனுமார் உண்டே
கடப்பாடு அறிந்த புணரியலான. 4குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே. 5ஈறு இயல் மருங்கினும் இசைமை தோன்றும். 6உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக் குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா
ஆய்தம் அஃகாக் காலையான. 7குன்று இசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும்
நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே. 8ஐ ஔ என்னும் ஆயீர் எழுத்திற்கு
இகர உகரம் இசை நிறைவு ஆகும். 9நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி. 10குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே. 11ஓர் எழுத்து ஒருமொழி ஈர் எழுத்து ஒருமொழி
இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட
மூன்றே மொழி நிலை தோன்றிய நெறியே. 12மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும். 13தம் இயல் கிளப்பின் எல்லா எழுத்தும்
மெய்ந் நிலை மயக்கம் மானம் இல்லை. 14ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற
க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்று ஆகும். 15அவற்றுள்,
ரகார ழகாரம் குற்றொற்று ஆகா. 16குறுமையும் நெடுமையும் அளவின் கோடலின்
தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல. 17செய்யுள் இறுதிப் போலும் மொழிவயின்
னகார மகாரம் ஈர் ஒற்று ஆகும். 18னகாரை முன்னர் மகாரம் குறுகும். 19மொழிப்படுத்து இசைப்பினும் தெரிந்து வேறு இசைப்பினும்
எழுத்து இயல் திரியா என்மனார் புலவர். 20அகர இகரம் ஐகாரம் ஆகும். 21அகர உகரம் ஔகாரம் ஆகும். 22அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐ என் நெடுஞ் சினை மெய் பெறத் தோன்றும். 23ஓர் அளபு ஆகும் இடனுமார் உண்டே
தேரும் காலை மொழிவயினான. 24இகர யகரம் இறுதி விரவும். 25பன்னீர் உயிரும் மொழி முதல் ஆகும். 26உயிர் மெய் அல்லன மொழி முதல் ஆகா. 27க த ந ப ம எனும் ஆவைந்து எழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே. 28சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே
அ ஐ ஔ எனும் மூன்று அலங்கடையே. 29உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர்
வ என் எழுத்தொடு வருதல் இல்லை. 30ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய. 31ஆவொடு அல்லது யகரம் முதலாது. 32முதலா ஏன தம் பெயர் முதலும். 33குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். 34முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது
அப் பெயர் மருங்கின் நிலையியலான. 35உயிர் ஔ எஞ்சிய இறுதி ஆகும். 36க வவொடு இயையின் ஔவும் ஆகும். 37எ என வரும் உயிர் மெய் ஈறாகாது. 38ஒவ்வும் அற்றே ந அலங்கடையே. 39ஏ ஒ எனும் உயிர் ஞகாரத்து இல்லை. 40உ ஊகாரம் ந வவொடு நவிலா. 41உச் சகாரம் இரு மொழிக்கு உரித்தே. 42உப் பகாரம் ஒன்று என மொழிப
இரு வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே. 43எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இலவே. 44ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும்
அப் பதினொன்றே புள்ளி இறுதி. 45உச் சகாரமொடு நகாரம் சிவணும். 46உப் பகாரமொடு ஞகாரையும் அற்றே
அப் பொருள் இரட்டாது இவணையான. 47வகரக் கிளவி நான் மொழி ஈற்றது. 48மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப
புகர் அறக் கிளந்த அஃறிணை மேன. 49