தொல்காப்பியம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இந்த புத்தகத்தை Mobi(kindle) fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை EPUB fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை RTF fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை PDFஆக பதிவிறக்குக. இவ்வடிவில் பதிவிறக்குக

தொல்காப்பிய மூலஓலையின் முதலோலை
மூல ஓலையுடனான தொல்காப்பிய அமைப்பு
தொல்காப்பிய எழுத்து நடை - ஒரு பகுதி.ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு


 • சிறப்புப்பாயிரம்


வட வேங்கடம் தென் குமரி

ஆயிடைத்

தமிழ் கூறும் நல் உலகத்து

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் 5


செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்

புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்

நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து

அறம் கரை நாவின் நான்மறை முற்றிய 10


அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து

மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி

மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்

பல் புகழ் நிறுத்த படிமையோனே. 15

எழுத்ததிகாரம்[தொகு]

 1. நூல் மரபு
 2. மொழி மரபு
 3. பிறப்பியல்
 4. புணரியல்
 5. தொகை மரபு
 6. உருபியல்
 7. உயிர் மயங்கியல்
 8. புள்ளி மயங்கியல்
 9. குற்றியலுகரப் புணரியல்

சொல்லதிகாரம்[தொகு]

 1. கிளவியாக்கம்
 2. வேற்றுமையியல்
 3. வேற்றுமை மயங்கியல்
 4. விளி மரபு
 5. பெயரியல்
 6. வினையியல்
 7. இடையியல்
 8. உரியியல்
 9. எச்சவியல்

பொருளதிகாரம்[தொகு]

 1. அகத்திணையியல்
 2. புறத்திணையியல்
 3. களவியல்
 4. கற்பியல்
 5. பொருளியல்
 6. மெய்ப்பாட்டியல்
 7. உவமயியல்
 8. செய்யுளியல்
 9. மரபியல்

தொல்காப்பியம் சொல்லும் இலக்கணம்[தொகு]

தொல்காப்பியம் தமிழ் மொழியின் இலக்கணம் கூறும் நூல். தமிழ் மொழியில் உள்ள சொற்களில் பயின்றுவரும் எழுத்துக்களையும் அதன் வகைகளையும் கூறுவது எழுத்ததிகாரம். சொல்லப்படும் சொற்கள் கருத்தைப் புலப்படுத்தும் வகையில் வாக்கியங்களாக அமைவதையும் சொல்லின் வகைகளையும் கூறுவது சொல் அதிகாரம். தமிழ் நூல்கள் சொல்லும் பொருளையும் சொல்லும் பாங்கினையும் கூறுவது பொருளதிகாரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தொல்காப்பியம்&oldid=1294986" இருந்து மீள்விக்கப்பட்டது