உள்ளடக்கத்துக்குச் செல்

நன்னூல் எழுத்ததிகாரம் 3. உயிரீற்றுப்புணரியல்

விக்கிமூலம் இலிருந்து

நன்னூல் விருத்தியுரை

[தொகு]

(புத்தம் புத்துரை எனப்படும் விருத்தியுரை)

உரையாசிரியர்: மாதவச் சிவஞான அடிகளார்

[தொகு]

3. உயிரீற்றுப் புணரியல்

[தொகு]

1. புணர்ச்சி

[தொகு]

நூற்பா: 151


(புணர்ச்சி)


மெய்யுயிர் முதலீ றாமிரு பதங்களும்
தன்னொடும் பிறிதொடு மல்வழி வேற்றுமைப்
பொருளிற் பொருந்துழி நிலைவரு மொழிகள்
இயல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே. (01)


நூற்பா: 152


(அல்வழி, வேற்றுமை)


வேற்றுமை யைம்முத லாறா மல்வழி
தொழில்பண் புவமை யும்மை யன்மொழி
எழுவாய் விளியீ ரெச்சமுற் றிடையுரி
தழுவு தொடரடுக் கெனவீ ரேழே. (02)


நூற்பா: 153

(இயல்பு புணர்ச்சி)


விகார மனைத்து மேவல தியல்பே. (03)


நூற்பா: 154


(விகாரப்புணர்ச்சி)


தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
மூன்று மொழிமூ விடத்து மாகும். (04)


நூற்பா: 155


(செய்யுள் விகாரம்)


வலித்தன் மெலித்த னீட்டல் குறுக்கல்
விரித்த றொகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி. (05)


நூற்பா: 156


ஒருமொழி மூவழிக் குறைதலு மனைத்தே. (06)


நூற்பா: 157


ஒருபுணர்க் கிரண்டு மூன்றுமுறப் பெறும். (07)

பொதுப்புணர்ச்சி

[தொகு]

நூற்பா: 158

(மெல்லினம் இடையினங்களின் புணர்ச்சி)


எண்மூ வெழுத்தீற் றெவ்வகை மொழிக்கும்
முன்வரு ஞநமயவக்களியல்பும்
குறிலவழி யத்தனி யைந்நொது முன்மெலி
மிகலுமாம் ணளனல வழிநத் திரியும். (08)


நூற்பா: 159


(பொதுப்பெயர் உயர்திணைப்பெயர்கள் புணர்ச்சி)


பொதுப்பெய ருயர்திணைப் பெயர்க ளீற்றுமெய்
வலிவரி னியல்பா மாவி யரமுன்
வன்மை மிகாசில விகாரமா முயர்திணை. (09)


நூற்பா: 160


(வினாப்பெயர் விளிப்பெயர் புணர்ச்சி)


ஈற்றியா வினாவிளிப் பெயர்முன் வலியியல்பே. (10)


நூற்பா: 161


(முன்னிலைவினை ஏவல்வினைகளின் புணர்ச்சி)


ஆவி யரழ விறுதிமுன் னிலைவினை
ஏவன்முன் வல்லின மியல்பொடு விகற்பே. (11)


உயிரீற்றுச் சிறப்புப்புணர்ச்சி

[தொகு]

நூற்பா: 162


(உயிர்முன் உயிர்புணர்தல்)


இஈ ஐவழி யவ்வு மேனை
யுயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையும்

உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும். (12)


நூற்பா: 163


(வினாச்சுட்டுகளின் முன் நாற்கணமும் புணர்தல்)


எகர வினாமுச் சுட்டின் முன்னர்
உயிரும் யகரமு மெய்தின் வவ்வும்
பிறவரி னவையுந் தூக்கிற் சுட்டு
நீளின் யகரமுந் தோன்றுத னெறியே. (13)


நூற்பா: 164


(குற்றியலுகர முற்றியலுகரங்களின் முன் உயிர், யகரங்கள் புணர்தல்)


உயிர்வரி னுக்குறண் மெய்விட் டோடும்
யவ்வரி னிய்யா முற்றுமற் றொரோவழி. (14)


நூற்பா: 165


(உயிரீற்றின்முன் வல்லினம் புணர்தல்)


இயல்பினு விதியினு நின்ற வுயிர்முன்
கசதப மிகும்வித வாதன மன்னே. (15)


நூற்பா: 166


(சில மரப்பெயர்முன் வல்லினம் புணர்தல்)


மரப்பெயர் முன்ன ரினமெல் லெழுத்து
வரப்பெறு னவுமுள வேற்றுமை வழியே. (16)



அகரவீற்றுச் சொற்களின் புணர்ச்சி

[தொகு]

நூற்பா: 167


செய்யிய வென்னும் வினையெச்சம் பல்வகைப்
பெயரி னெச்சமுற் றாற னுருபே
அஃறிணைப் பன்மை யம்மமுன் னியல்பே. (17)


நூற்பா: 168


வாழிய வென்பத னீற்றி னுயிர்மெய்
ஏகலு முரித்தஃ தேகினு மியல்பே. (18)


நூற்பா: 169


சாவவென் மொழியீற் றுயிர்மெய் சாதலும்விதி. (19)


நூற்பா: 170


பலசில வெனுமிவை தம்முன் றாம்வரின்
இயல்பு மிகலு மகர மேக
லகரம் றகர மாகலும் பிறவரின்
அகரம் விகற்ப மாகலு முளபிற. (20)



ஆகாரவீற்றுச்சொற்களின் புணர்ச்சி

[தொகு]

நூற்பா: 171


அல்வழி யாமா மியாமுற்று முன்மிகா. (21)


நூற்பா: 172


குறியதன் கீழாக் குறுகலு மதனோ
டுகர மேற்றலு மியல்புமாந் தூக்கின். (22)



இகரவீற்றுச் சொற்களின் புணர்ச்சி

[தொகு]

நூற்பா: 173


அன்றி யின்றியென் வினையெஞ் சிகரம்
தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே. (23)


நூற்பா: 174

உரிவரி னாழியி னீற்றுயிர் மெய்கெட
மருவும் டகர முரியின் வழியே
யகர வுயிர்மெய்யா மேற்பன வரினே. (24)


நூற்பா: 175


சுவைப்புளி முன்னின மென்மையுந் தோன்றும். (25)

இகர ஐகார வீற்றுச்சொற்களின் புணர்ச்சி

[தொகு]

நூற்பா: 176


அல்வழி இஐம் முன்ன ராயின்
இயல்பு மிகலும் விகற்பமு மாகும். (26)



ஈகாரவீற்றுச் சொற்களின் புணர்ச்சி

[தொகு]

நூற்பா: 177


ஆமுன் பகரவீ யனைத்தும் வரக்குறுகும்
மேலன வல்வழி யியல்பா கும்மே. (27)


நூற்பா: 178


பவ்வீ நீமீ முன்ன ரல்வழி
இயல்பாம் வலிமெலி மிகலுமா மீக்கே. (28)


முற்றுகரவீ்ற்றுச் சிறப்புவிதி

[தொகு]

நூற்பா: 179


மூன்றா றுருபெண் வினைத்தொகை சுட்டீ
றாகு முகர முன்ன ரியல்பாம். (29)


நூற்பா: 180


அதுமுன் வருமன் றான்றாந் தூக்கின். (30)


குற்றுகரவீற்றுச் சொற்களின் புணர்ச்சி

[தொகு]

நூற்பா: 181


வன்றொட ரல்லன முன்மிகா வல்வழி. (31)


நூற்பா: 182


இடைத்தொட ராய்தத் தொடரொற் றிடையின்
மிகாநெடி லுயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை. (32)


நூற்பா: 183


நெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுட்
டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே. (33)


நூற்பா: 184


மென்றொடர் மொழியுட் சிலவேற் றுமையிற்
றம்மின வன்றொட ராகா மன்னே. (34)


நூற்பா: 185


ஐயீற் றுடைக்குற் றுகரமு முளவே. (35)



நூற்பா: 186


(திசைப்பெயர்களின் புணர்ச்சி)


திசையொடு திசையும் பிறவுஞ் சேரின்
நிலையீற் றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்
றகரம் னலவாத் திரிதலு மாம்பிற. (36)


நூற்பா: 187


(தெங்கு>தேங்காய்)''


தெங்குநீண் டீ்றறுயி்ர் மெய்கெடுங் காய்வரின். (37)


நூற்பா: 188


(எண்ணுப்பெயர்களின் புணர்ச்சி)


எண்ணிறை யளவும் பிறவு மெய்தின்
ஒன்று முதலெட் டீறா மெண்ணுண்
முதலீ ரெண்முத னீளு மூன்றா
றேழ்குறு கும்மா றேழல் லவற்றின்
ஈற்றுயிர் மெய்யு மேழ னுயிரும்
ஏகு மேற்புழி யென்மனார் புலவர். (38)


நூற்பா: 189


(ஒன்று, இரண்டு)


ஒன்றன் புள்ளி ரகர மாக
இரண்ட னொற்றுயி ரேகவுவ் வருமே. (39)


நூற்பா: 190


மூன்று)


மூன்றனுறுப் பழிவும் வந்தது மாகும். (40)


நூற்பா: 191


(நான்கு)


நான்கன் மெய்யே லறவா கும்மே. (41)


நூற்பா: 192


(ஐந்து)


ஐந்தனொற் றடைவது மினமுங் கெடும். (42)


நூற்பா: 193


(எட்டு)


எட்ட னுடம்புணவ் வாகு மென்ப. (43)


நூற்பா: 194


(ஒன்பது)


ஒன்பா னொடுபத்து நூறு மொன்றின்
முன்னதி னேனைய முரணி யொவ்வொடு
தகர நிறீஇப்பஃ தகற்றி னவ்வை
நிரலே ணளவாத் திரிப்பது நெறியே. (44)


நூற்பா: 195


முதலிரு நான்கா மெண்முனர்ப் பத்தின்
இடையொற் றேக லாய்த மாகல்
எனவிரு விதியு மேற்கு மென்ப. (45)


நூற்பா: 196


ஒருபஃ தாதிமுன் னொன்றுமுத லொன்பான்
எண்ணு மவையூர் பிறவு மெய்தின்
ஆய்த மழியவாண் டாகுந் தவ்வே. (46)


நூற்பா: 197


ஒன்றுமுத லீரைந் தாயிரங் கோடி
எண்ணிறை யளவும் பிறவரிற் பத்தின்
ஈற்றுயிர் மெய்கெடுத் தின்னு மிற்றும்
ஏற்ப தேற்கு மொன்பது மினைத்தே. (47)


நூற்பா: 198


இரண்டு முன்வரிற் பத்தினீற் றுயிர்மெய்
கரந்திட வொற்றுனவ் வாகு மென்ப. (48)


நூற்பா: 199


ஒன்ப தொழித்தவெண் ணொன்பது மிரட்டின்
முன்னதின் முன்னல வோட வுயிர்வரின்
வவ்வு மெய்வரின் வந்தது மிகனெறி. (49)


ஊகார வீற்றுச்சொற்களின் புணர்ச்சி

[தொகு]

நூற்பா: 200


பூப்பெயர் முன்னின மென்மையுந் தோன்றும். (50)

ஏகார ஓகாரவீற்றுச் சொற்களின் புணர்ச்சி

[தொகு]

நூற்பா: 201


இடைச்சொல் லேயோ முன்வரி னியல்பே. (51)

ஐகாரவீற்றுச் சொற்களின் புணர்ச்சி

[தொகு]

நூற்பா: 202


வேற்றுமை யாயி னைகா னிறுமொழி
ஈற்றழி வோடுமம் மேற்பவு முளவே. (52)


நூற்பா: 203


பனைமுன் கொடிவரின் மிகலும் வலிவரின்
ஐபோ யம்முந் திரள்வரி னுறழ்வும்
அடடுறி னைகெட்டந் நீள்வுமாம் வேற்றுமை. (53)

உயிரீற்றுப் புணரியல் முற்றும்

[தொகு]
பார்க்க
நன்னூல்
நன்னூல் மூலம்
நன்னூல் எழுத்ததிகாரம் 1. எழுத்தியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 2. பதவியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 4. மெய்யீற்றுப்புணரியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 5. உருபுபுணரியல்
நன்னூல் சொல்லதிகாரம்
[[]] :[[]]