பக்கம்:அன்பு மாலை.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்பு LDT&ು 71

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

எண்ணத் தொலையாப் பேரின்பம் எங்கே என்று தேடுகின்ருர்; பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்

படைக்க மிகவும் முயல்கின்ருர்; கண்ணின் மணியாய் அருணையினில்

கவிஞர் ராம சுரத்குமார் அண்ணல் தன்னைப் பணிமின்கள்

ஆகா தெலாம்போய் நலமுறுமே. I 92

பண்ணப் பணத்த- மிகப் பெருத்த,

சொல்லில் பொருள்போல் மலர்மணம்போல்

தூய நீரில் தண்மைபோல்

இல்லில் கணவன் மனைவிபோல்

- இலங்கும் சிவனும் சக்தியுமே

நல்ல படியே அருள்பொழிய

நண்ணும் ராம சுரத்குமார்

வல்லன், எல்லாம் வல்லசித்தன்.

மலர்த்தாள் அடைந்தால் நலம்பெறுவீர். 1 9.3

ஒன்றே நினைமின், ஒன்றையே

உள்ளத் தடைத்தே உறுதிசெய்ம் மின்: ஒன்றே என்றும் உரைசெய் மின்:

ஒன்றே செய்து நலம்பெறுவீர்; ஒன்றே என்ன உறுபொருளை -

உறலாம் என்பான். அருணையினில் ஒன்றே காணும் ராம சுரத்

குமார் என் னும்பேர் உள்ளவனே. I 94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/77&oldid=535598" இருந்து மீள்விக்கப்பட்டது