பக்கம்:அமர வேதனை.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வெறும் புகழ்!



பார்க்கப் போனால்

வெறும் புகழில்

என்ன இருக்கிறது?

புகழ் ஒரு வேசி......


ஏஏய்,வேசியாவது

காசு சம்பாதிப்பாள்.

கிராக்கி வராதபோது

இன்பம் தருவான்.

வெறும் புகழ்

என்ன தரமுடியும்?


காப்பி தாகம்

மனசை வறட்டுது;

புகழை குடிக்க முடியுமா?


பசி

வேட்டை நாயென

குடலைக் குதறுது

புகழ் தீனி ஆகுமா?

கண்டதும் கவரும்

பண்டமும் பகட்டும்

கண்ணில் பட்டால்

ஆசை தூண்டுது

வாங்கி மகிழ் என!

மணிப் பர்ஸ் காலி.

புகழைக் கொண்டு

பணப்பை ரொம்புமா?


வல்லிக்கண்ணன்
37
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/39&oldid=1207012" இருந்து மீள்விக்கப்பட்டது