இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
231. இவற்றின் சுரப்புகளும் அவற்றின் வேலைகளும் யாவை?
- 1. புறணியின் சுரப்பு கார்ட்டின். இது குருதியில் உப்பின் அளவைச் சரி செய்வது. பெண்ணிடத்து ஆண்மையை உண்டாக்குவது.
- 2. அகணியின் சுரப்பு அட்ரினலின். இது குருதி அழுத்தத்தை ஒரே சீராக வைக்கிறது. நெருக்கடி நிலையைச் சமாளிப்பது.
232. விடலைப்பருவம் (அடோலசன்ஸ்) என்றால் என்ன?
- குழந்தைப் பருவத்தின் இறுதியில் தொடங்கி, முழு முதிர்ச்சி ஏற்பட்டவுடன் முடியும் ஒரு முதன்மையான வளர்ச்சிப் பருவம்.
233. இதன் வயது எல்லை என்ன ?
- 1. ஆண் 13-25
- 2. பெண் 12-18.
234. இப்பருவத்தை அழகாக விளக்கியுள்ள பெரும் இந்தியத் கவிஞர் யார்?
- நோபல் பரிசுப் பெற்ற கவி தாகூர்.
235. நம் உடலிலுள்ள நாளமுள்ள சுரப்பிகள் யாவை?
- உமிழ்நீர்ச்சுரப்பிகள், கணையம், கல்லீரல்.
236. கல்லீரலின் சிறப்பென்ன?
- உடலிலுள்ள சுரப்பிகளில் மிகப் பெரியது. இது சுரக்கும் பித்த நீர் பித்தநீர்ப்பையில் சேமித்து வைக்கப்படுகிறது. இது உடலின் வேதித் தொழிற்சாலை.
237. கல்லீரல் தொடர்பாக உண்டாகும் இருநோய்கள் யாவை?
- கல்லீரல் இறுகல், மஞ்சட்காமாலை.
238. கல்லீரலின் வேலைகள் யாவை?
- 1. குருதி வேதி இயைபைச் சீராக்குதல்.
- 2. கொழுப்பு செரிக்கப் பித்தநீர் உதவுதல்.
- 3. இரும்பைச் சேமித்தல்.
- 4. வைட்டமின்கள் A,D ஆகிய இரண்டையும் சேமித்தல்.
- 5. குருதியிலிருந்து நஞ்சுகளை நீக்குதல்.
239. பித்தநீர் என்றால் என்ன?
கல்லீரல் சுரக்கும் பச்சை மஞ்சள் நிறச் சுரப்பு. இது