பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

37


விக்டர் ஹுகோ

175.அறியாமலே எம் எண்ணங்களில் சில கடவுள் பிரார்த்தனையாக இருப்பதுண்டு.

விக்டர் ஹகோ

176.ஒவ்வொரு புனிதமான ஆசையும் கடவுள் பிரார்த்தனையே ஆகும்.

ஹூக்கர்

177.சுவர்க்கம்தான் கேட்காமலே கிடைக்கும்; கடவுளோ கேட்டால்தான் கிட்டுவர்.

லவல்

178.கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டிய மூன்று வரங்கள்; முதலாவதாக நல்ல மனச்சான்று; இரண்டவாதாக மன ஆரோக்கியம்; மூன்றாவதாகத் தேக ஆரோக்கியம்.

ஸெனீகா

179.பிரார்த்தித்தால் கேட்டதைப் பெறுவோம், அல்லது கேட்டிருக்க வேண்டியதைப் பெறுவோம்.

லெய்ட்டன்


8. சுவர்க்கம்


180. அன்பும் அறமும் எவ்வளவு, சுவர்க்கமும் அவ்வளவே.

-பார்க்கர்