35
இ.ள்: இறைவ, நின் திருமேனியின் ஒரு பகுதியாகிய வலப்பாகத்தில் மூவுலகம் ஈரடியால் அளந்த காத்தற் கடவுளாகிய திருமால் உள்ளார். மற்றொரு பகுதியாகிய இடப்பாகத்தில் (நின்னிற்பிரிவற விளங்கும்) உமையம்மையார் உள்ளார் இங்ஙனமென்றால் இருபக்கத்திலும் நினது திருமேனியின் செம்மை நிறத்தினை முற்றுந்தெரிந்துகொள்ள இயலாதவர்களானோம். நின்னைப் பொருந்தி (மறைத்தது) திருமாலுருவோ அன்றி உமையம்மையார் உருவோ (இதனை எமக்கு விளங்கக்கூறு வாயாக) எ-று
மாலொரு பாலும் மாதொரு பாலும் பொருந்தி விளங்கும் இறைவனது திருக்கோலத்தினை வியந்துரைத்தவாறு. ‘மாதொரு பாலும் மாலொரு பாலும் மகிழ்கின்ற நாதர்’ (1-97-2) என்பது ஆளுடைய பிள்ளையார் தேவாரம்.
நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை யீர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ—பேர்ந்து வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ வென்னோ இளங்குழவித் திங்க ளிது. (42)
இ-ள்: இளமை வாய்ந்த பிள்ளைப் பிறையாக விளங்கும் இம்மதிதான், தன்னைப்பாம்பு தீண்டி விழுங்கியதனாற் சிறுகியதோ? அன்றி இறைவனாகிய நீயே அம்மதியை அளவுபெறப்பிளந்து (நினது திரு முடிக்குப்) பொருந்த அணிந்து கொண்டனையோ? அன்றி இப்பிறைதான் வளமுடைய பிள்ளையாக மீண்டும் வளர்தற்குரிய ஆற்றலையிழந்து போயிற்றோ? இப்பிறை வளர்ச்சியின்றி இருந்த நிலையில் இருப்பதற்குரிய காரணம் யாதோ? எ-று.