பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஷாக் ஜியுல்நஸாரியன் 7.3 'அஸ்மிக் ஒரு பரிசுத்த கன்னி. ஒருநாள் அஸ்மிக் ஒரு புதிய கிறிஸ்துவைப் பெற்றெடுப்பாள் : அந்தக் கிறிஸ்து நமது நாகரிகத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பார்; அதன் பிறகு முதலாவது குரங்கு திரும்பவும் கோடாரியைக் கண்டுபிடிக்கும்; அணுசக்தி ராக்கெட்டுகளை உற்பத்தி பண்ணக்கூடிய ஒரு புதிய சமூகத்தினர் தோன்றுவதற்கு அது உதவியாக இருக்கும்’ என்று ஜிகாம் சொன்னன். யுகமுடிவு நாள் (கடைசித் தீர்ப்பு நாள்) பற்றி ஒவ்வொரு தலைமுறையும் தனக்குத் தோன்றிய வகையில் விளக்கம் கூறுகிறது. அஸ்மிக் புனித கன்னியாகவே இருந்தாள். கரிய குழாயை, நெளிநெளிக் கூந்தலை, ஒரே பார்வையில் வெற்றி கொள்ளும் ஏக்கம் நிறைந்த கரும் கண்களை அவள் கண்டாள். ஆயினும் அவள் அவற்றுக்கு அடிமைப்பட்டுவிடவில்லை. அவளுடைய சிநேகிதிகள் சீற்றம் கொண்டார்கள். இளைஞர்களோ, 'அஸ்மிக்கா? அவள் எதுக்கு உதவுவாள்? அவள் நடப்பதையும் பேசுவதையும் சிரிப்பதையும் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கிறது’’ என்று வெறுப்புடன் சொன்னர்கள். "அவள் தன் வாழ்வில் ஒரே ஒரு முறைதான் அழுதாள்; காலில் ஒரு ஆணி குத்திவிட்டபோது’ என்ருர்கள். அவளே அவ்வளவு அழகுடன் படைத்து இயற்கை தன் சக்தியை வீணடித்துவிட்டது என்றே அனைவரும் நம்பினர். அவள் பார்கெவ் ஆராமலைக்கூட கவனிக்கவில்லை. ஆயினும் அவன் அவளைக் கவனித்தான். அஸ்மிக் பெண்கள் அனைவரிலும் மிகுந்த வசீகரமானவளாகவும் வெகு அடக்கம் உள்ளவளாகவும் இருந்ததாலேயே அவன் அவளைக் கவனித்தான். அவள் குருடி போல் தோன்றியதே முக்கியக் காரணம் ஆகும். அவள் அவனைப் பார்த்தபோதிலும், உண்மையில் அவனே அவள் பார்த்ததில்லை.

  • நாம் நாடகம் பார்க்கப் போகலாம்.’’ அஸ்மிக்கின் கண்கள் மின்னிப் பிரகாசித்தன. வா, போவோம். இன்று என் மனம் சோர்ந்திருக்கிறது.’’ மனம் சோர்ந்தபோது மட்டும்தான் நீ நாடகத்துக்குப் போவாயோ?”

இல்லை. நான் அப்படிச் சொல்லவில்லை.” 'ஜெம்மா என்ன ஆள்ை?’’ 'அவள் அலுப்புத்தர ஆரம்பித்துவிட்டாள்.'