பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஷாக் ஜியுல்நலாரியன் 77 மறுநாள் காலை பார்கெவ் அஸ்மிக்பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான். அவளைப்பற்றி அதிகம் நினைக்க நினைக்க, அவனுக்குக் கோபம் அதிகமாக வந்தது. ஒரு கண்ணுடியைக் கடந்து சென்றபோது அதில் தெரிந்த தனது பிம்பத்தை அவன் பார்த்தான். அவனுடைய புகைக்குழாய் அவனுக்கு நன்முகத் தான் இருந்தது. அஸ்மிக் சொன்னது தப்பு. அவன், வழக்கம் போல், குழாயைப் புகைத்தவாறே யுனிவர்சிட்டிக்குப் போனன். பேராசிரியர் லாலெயன் தாழ்வாரத்தில் அவனே நிறுத்தினர். 'நான் உன் புத்தகத்தைப் படித்தேன், இளைஞனே. அது எனக்குப் பிடித்திருக்கிறது.’’ -

நன்றி.” 'எனக்கு நன்றி சொல்வதற்கு ஒன்று மில்லை. நீ தற்பெருமை கொள்ளாமல் இருந்தால், நீ ஒரு உண்மையான கவிஞன் ஆவாய்.”

" " ότώύτσα ?" " 'பரவாயில்லை. உனது அடுத்த வகுப்புக்கு மணி அடிக்கிறது.’’ வகுப்புகளின் இடைவேளையின்போது, முற்றிலும் எதிர் பாராத விதத்தில், 'இன்று மாலை நாம் என் அத்தையைப் பார்க்கப் போவோம்’ என்று அஸ்மிக் சொன்னுள். ‘'எதுக்காக?' ' "அவள் பழங்காலத்து மனுவி. எனக்கு மணமகனக வரப் போகிறவனைத் தான் பார்த்தால் ஒழிய, என் கல்யாணத்துக்குச் சம்மதிக்க மாட்டேன் என்று அவள் சொல்லியிருக்கிருள்.” 'இந்தப் பேச்சை நிறுத்து!’’ 'நீ திரும்பவும் அந்தக் குழாயைப் புகைக்கிருயா?’’ என்னை யார் தடுப்பது?’’ ‘'நீ புகை பிடித்துக்கொண்டேயிருந்தால் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட்டேன்.’’ அதை நிறுத்து என்று நான் சொன்னேன்!” என்று பார்கெவ் கோபமாய்க் கூறிஞன். 'கோபப்படாதே. நான் நேற்றே அதை உன்னிடம் சொன்னேன்.” அது விசித்திரமாகப் படலாம். அன்று மாலை அவர்கள் சந்திக்கத்தான் செய்தார்கள். -