பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ பெண்களே, நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்! போகிருர்’ என்று கிழவன் மேட்டோ சொல்வான். அவன் எப்போதும் தலைவரின் கோபப் பார்வையில் ஒரு புயலை எதிர் பார்த்திருந்தான். அவர் ஏன் தனது மூக்கிற்கு அப்பால் பார்க்க முடியவில்லை என்று அவரை யாராவது கேட்க வேண்டும்' என்பான். "அவருக்குக் கிட்டப் பார்வை. துரு அவர் கண்களைக் கவ்விக் கொண்டது. காலுக்கு அடியில் உள்ள தரையை அவரால் பார்க்க முடியாது. அவர் தன் கண்களை ஒருபோதும் வானத்துக்கு உயர்த்துவதில்லை. அவர் வெறுமனே துரு ஏறிய கிழட்டுக் கார்சோ. அவ்வளவுதான் விஷயம்!'" காதலுக்கும் கார்சோவுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். ஒரே தாவலில் எந்த முடிவுக்கும் வராதீர்கள். துரு சில சமயம் தங்கத்தைக் கொண்டுவர முடியும். ஒருபுறம் கடுகு நிறத்தில் தூசி இருக்கிறது. அதே சமயம் சில இலைகளின்மீது படிந்திருப்பதுபோல் வெள்ளிய நட்சத்திர துளசியும் இருக்கிறது என்று வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது. துரு ஏறிய கிழ கார்சோவுக்கு ஒரு மகள் இருந்தாள். ஏரெல் அல்லது ஏரெவிக் என்று பெயர். அப்படியென்ருல் சூரியஒளி எனப் பொருள். அவளுடைய மாற்ருந்தாய் திருமதி ரோசா என்று அழைக்கப்பட்டாள். ஏரெவிக் சூரியன்போல் இருந்தாள்; ஆனால் ரோசா ஒரு ரோசாப்பூ போல் இல்லவே இல்லை. நான் அவளே. திருமதி முள்ளி என்று குறிப்பிடுவேன். பாவம் ஏரெவிக். துருவுக்கும் முள்ளுக்குமிடையே சிக்கி அவதிப் பட்டாள். அவள் உதயத்துக்கும் முன்னரே எழுந்துவிடுவாள். நடுராத்திரிக்கு முன் படுக்கப் போகமாட்டாள். செய்திகள் சொல்லப்போவதிலும், சமையல் தவிர இதர வீட்டு வேலைகள் எல்லாம் செய்வதிலும் அவள் நாட்கள் கழிந்தன. சிக்கிரம் நீ எங்கே போய்த் தொலைந்தாய்? வெங்காயத்தை எடுத்துத் தா!' ஒ, நீ செத்த பூனையைவிட ரொம்ப மோசம்! உன்னல் வேகமாக நடக்க முடியாதா என்ன?” படுக்கையை உலரப் போடு சீக்கிரம் செய்!” அதுதான் திருமதி முள்ளி. கிழட்டுத் துரு ஏறி தன் பங்குக்கு ஏவுவார் : 'ஏரெவ், என் பூட்சுக்குப் பாலிஷ் போடு!”