பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii மொழியில் தான் எழுதினர். ஆயினும், ஆர்மேனிய ஆன்மாவின் இசையையும் தேடல்களையும் அவர் உண்மையாகப் பதிவு செய்தார். முப்பது வருஷங்களுக்கு முன்பிருந்தே அவருடைய படைப்புகள் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கின்றன. சென்னையில் மிக அதிகமாகப் பேச்சு வழக்கில் இருக்கிற மொழியான தமிழிலும் அவை மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. 'நாம் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் ஒரு ஆர்மேனியனை இனம் காணமுடியும்' என்று ஸ்ரோயன் ஒரு சமயம் சொன்னர். " எப்படி?’ என்று யாரோ கேட்டார்கள், கண்களைப் பார்த்து... ஆர்மேனியக் கண்கள் வருத்தமாய், துயரம் நிறைந்து இருக்கும்.’’ ஸ்ரோயன் 1978-ல் ஆர்மேனியா சென்ருர். அப்போது அவர் சொன்னர் : 'இப்போது இதுதான் எனக்கு முக்கியமாகப்படுகிறது. ஆர்மேனியர் கண்களில் வருத்தமும் துயரமும் குறைந்திருக் கின்றன. நான் எங்கே போனலும், ஆரோக்கியமான, வலிமையும் சந்தோஷமும் கொண்ட ஜனங்களையே பார்க்கிறேன். இது அற்புதமானது...' சென்னை } அசோகமித்திரன் 31 ஆகஸ்ட் 1979