பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 3 ரகசியப் பேச்சு பிறகு, எகோர் தன் விஷயத்துக்கு வருகிருன் நைந்து, இரத்தம் செத்த எண்ணங்களே அவன் தன்னுள்ளிருந்து பிழிகிருன். மீண்டும் அவன் தனது குரலை உயர்த்துகிருன். கூப்பாடு போடுகிருன். அதிக வேகத்தோடு கத்துகிருன்... அவர்கள் விரும்பினுலும் விரும்பாவிட்டாலும் உரத்த சத்தத்தை அவர்கள் கட்டாயம் கிரகித்தே ஆகவேண்டும் எனத் தோன்று கிறது. அவர்கள் சிரத்தை காட்டவில்லை என்று அறிந்தாலும் கூட, அவன் தனது குரலை மேலும் உயர்த்துகிருன் தொண்டை புகைந்து, தன் குரல் உச்சத்தினல் தானே திணறிப் போகிற வரையில் அவன் கத்துகிருன். நெற்றியில், கழுத்தில், முகத்தில் எல்லாம் ரத்த நாளங்கள் விம்மிப் புடைக்கின்றன. வேறு என்ன செய்ய முடியும்?... எகோர், முக்கியமாக அண்மைக்காலத்தில், பரிகசிப்புக்கு உரியவனகிவிட்டான். அவன் பேசுகிருன், பேசு கிருன் விணுகப் பேசுகிருன் என உணர்கிருன். ஆனல் இன்னும் பேசுகிருன். மக்கள் அவனே வெறுத்து ஒதுக்குகிருர்கள். 'திரும் பவும் நீ முணுமுணுக்கிருய், எகோர்!’ என்கிரு.ர்கள். ஆமாம். அவன் முணுமுணுக்கிருன். சந்தேகம் இல்லாமல் அது முணமுணப்புதான். ஆனல், ஒரே ஒரு தடவை மாத்திரம் நீங்கள் நிஜமாகவே கவனித்துக் கேட்டால், நான் திரும்பவும் பேசமாட்டேன். ஒரு விஷயம் சொல்லப்படுவதற்கு ஒரே முறை போதும்தான். அப்போது அது முணமுணப்பு ஆகாது. நானும் ஒரு கிழவனகத் தோன்ற மாட்டேன். கவனியுங்களேன்... எகோர் தெருவில் தெரிந்தவர்களே அடிக்கடி நிறுத்துவான். அவன் சொல்ல வேண்டியதை அவசரமாகவும் ஆவலோடும் அவர்களிடம் வெளியிடுவான். அவர்கள் கண்களைக் குறுக்கி அவனைப் பார்ப்பார்கள். எகோரின் வார்த்தைகள் அவர்களது கன்னக்கதுப்புகளில் செம்மை சேர்க்கும். அவர்கள் தனது பேச்சைக் கவனிக்கவில்லை என்று அவன் தெளிவாகப் புரிந்து கொள்வான். ஏன் அவர்கள் கவனிப்பதில்லை?’’ எகோர் அவர்கள் சட்டைக்கையைப் பிடித்து இழுப்பான். அது சரி, அது சரி’ என்று அவர்கள் சொல்வார்கள். என்ருலும், அவர்கள் அவன் பேச்சைக் கவனமாய்க் கேட்கவில்லை என்பதை எகோர் கண்டுகொள்வான்... எகோர் களைப்படைய விரும்பினன். அவளுல் பேசமுடியாத அளவுக்குக் களைத்துப்போக, சிந்திக்க இயலாத அளவுக்குக் களைப்புற அவன் விரும்பினன், களைப்படைந்து லேசாகச் சிரிக்கவும், களைத்து அலுத்து, அனைவருடனும் அமைதியாகி, மற்றவர்களின் சித்தத்துக்கு இணங்கிப்போய், மாலையில் சோர்வுடன் வீடு திரும்பி நிம்மதியாய்த் துங்குவதற்கும் அவன் ஆசைப்பட்டான்.