பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூஷேக் கால்ஷோயன் 夏43 ஆறு வருஷங்கள். ஆளுல் இன்று. ஆனல் இன்று காலை லோரோவின் உள்ளம் கொந்தளித்தது. அவன் ஆடுகளை, குடும்பத்தை, தன்னையே தன் மனசிலிருந்து அகற்றிவிட்டான். அவனுக்கு முன்னே பள்ளத்தாக்குகளும் கணவாய்களும் நீல வானத்தால் நிரம்பித் திகழ்ந்தன. ஆராரட் சமவெளி ஒரு நீலத்திரை போர்த்திருந்தது. அக் கடல்அலைத் திரையின் மீது, பொங்கி வழியும் ஆரக்ஸ் நதி ஒரு வெள்ளிய பட்டை அமைத்திருந்தது. அதற்கும் அப்பால் ஒரு வரிசைக் கூடாரங்கள் புயலில் ஆடுவனபோல் எழுந்தும் தணிந்தும் காட்சி அளித்தன. அப்புறம் ஆர்மேனியன் மலைவிளிம்பு. ஆனல் அவனுக்கு, அவன் கண் முன்னல், வேருெரு வசந்தகாலக் காலே மிளிர்ந்தது. பூமாலை சூடிய மற்ருெரு உலகம்: நீலத்தில் ஆழ்ந்த வேறு மலைகள்; நகர்ந்து செல்லும் இன்னெரு நதி; சூரியளுேடும் உலகத்தோடும் பழகிய வேருெரு மந்தை ஆடுகளும் குட்டிகளும்: ஒரு பச்சைக் கம்பை வைத் திருந்த ஆடு மேய்க்கும் பையன் ஒருவன்; காய்கறி பறிக்கும் சிறுமிகள் வரிசை: பூமாலை அணிந்து கல்லுக்குக் கல் தாவிக்குதித்த சின்னஞ்சிறு பெண் ஒருத்தி வசந்தத்தோடு தோன்றினர். 'அலெஹ்”-கிழவன் அடிவானத்தை நோக்கியபடி அழைத் துக்கொண்டிருந்தான். "அலெஹ், என் கண்ணே, அலே-ஏஎஸ்... ! ? அவர்கள் அவன் பக்கத்தில் வந்து நின்றபோதுதான், அவன் தன் பேரப்பிள்ளைகளைக் கவனித்தான். சிறுமி அவன் கால்களைப் பற்றிக்கொண்டிருந்தாள். "தாத்தா, ஆடுகள் எங்கே?’’ 'ஆடுகளா? கிழவனுக்கு உடனடியாக அந்தக் கேள்வி விளங்கவில்லை. 'ஆடுகளா?’’ அவன் பார்வை தூரத்திலிருந்து மீண்டு அக்கம்பக்கத்தைத் துழாவின. ஆடுகளுக்கு என்ன ஆகும், என் ஆட்டுக்குட்டியே?’ என்ருன். அவன் முழங்கால்கள் வலித்தன. தரை பிடித்து இழுத்தது. அவன் முனகலுடன் கீழே அமர்ந்தான். ஆனல் அடிவானம் அவன் பார்வையைக் கவர்ந்தது. அவன் மனம் அதே விஷயத் தைத் திரும்பவும் சித்திரித்தது. சிறுமி உணவு மூட்டையை அவிழ்த்தாள். நாம் சாப்பிட லாம். இருப்பது பூராவையும் நாம் சாப்பிட்டு விடுவோம், தாத்தா” என்ருள்.