பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூஷேக் கால்ஷோயன் 罩垒9 உணவு வேண்டாம். ஒயின் மட்டும், தயவுசெய்.” 'ஒ மாராதுக்!” ஸோரோ மவுனமாக உதவி வேண்டினன். " உனது புனிதக் கரத்தால் மூட்டிவிடப்பட்ட நெஞ்சத் தீ உன் புனிதக் கரத்தாலேயே திருப்தி அடைந்து குளிரட்டும்!” கிழவி திரும்பி வந்ததும் ஸோரோ தன் பேச்சைத் தொடர்ந் தான் : அன்று மாருத் மலையின் உயரமான மடம் உன் அன்பை என் இதயத்துள் புகுத்திய அந்த வசந்த நாளில், அலெஹ், நீ இவ்வளவு உயரம்தான் இருந்தாய். அவன் தரைக்குமேல் சிறிது அளவு அடையாளம் காட்டினன். 'உனக்குத் தெரியுமா? அன்றைக்கே, அலெஹ், காலணி எதுவுமின்றிப் பணி நனைத்த பாதங்களுடன் இருந்த அலெஹ், பூமாலை சூடிய அலெஹ், என்னுடைய அலெஹ் என்று நான் உணர்ந்தேன். அவள் என் அலெஹ். எனக்குச் சொந்தமான அலெஹ் , தெரிகிறதா?. அன்று மாருத் எனக்கு ஒரு காதலியைத் தந்தது. ஆனல் மறுநாளே கட்டுப்பாடில்லாத ஜனங்கள் அவளே அபகரித்துச் சென்ருர்கள். ஒரு கடுவாய் இளம் பிராணிகளின் மந்தைக்குள் புகுந்தது. அங்கே கொலையும் அழிவும், பிடுங்குவதும் ஒடுவதும் கொள்ளையிடுவதும் நிகழ்ந்தன. சூரியன் கறுப்பாகிவிட்டது. அன்று சூரிய கிரகணம். அலெஹ், நீயும் நானும் ஒருவரை ஒருவர் இழந்தோம். நான் சொல்வது சரிதான, என் கண்ணே?’’ கிழவன் ஒயின் குடித்தான். சிகரெட் பற்ற வைத்தான். மறுமொழிக்காகக் காத் தி ரு ந் தான். கிழவி மவுனமாக இருந்தாள். அவள் கழுத்து ஒரு பக்கமாய்ச் சாய்ந்திருந்தது. அவளுடைய மெலிந்த விரல்கள் பச்சை இலைகளோடு விளையாடிக் கொண்டிருந்தன. நீ இப்பவும் என் அலெஹ்தான்’ என்று கிழவன் முணு முணுத்தான். அந்தத் தொலைதுார நாள் கெட்டுப்போக வில்லை, அலெஹ். இன்றும் அது நிலைத்திருக்கிறது. அந்த வசந்த நாள் இன்று போலவே என் கண் முன் நிற்கிறது. ஆடு களும் குட்டிகளும் மாருத் மலையின் அடிவாரத்தில் துள்ளிக் கொண்டிருக்கின்றன. நீ...”* ஒ, முந்திய நாள் காலை நேரம் மாதிரித் தோன்றிய அந்தக் கடந்துபோன வசந்த நாள், மென்மையான வெல்வட்டிலும் வர்ணங்களிலும் அனைத்தையும் பொதிந்து வைத்த இனிய பொழுது, அவனைவிட்டு அகன்று செல்லாது. லோரோ மீண்டும் அதை வர்ணித்தான். - 'இப்படியாக... மாராதுக் என்னில் காதலைப் பதிவு செய்தது. அன்று முதல் இன்று வரை அந்தப் புனிதமான