பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 ஆகஸ்ட் வழுவழுப்பாக இருந்த ஒரு பாறையின்மேல் அவர்கள் நின்று சிரித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்திதான் சோர் வாகச் சிரித்தாள். பெருந்தேகி என்ன செய்துகொண்டிருந்தாள் என்று கவனிக்க ஆண்ட்ரோவுக்கு நேரமில்லை. அவன் எரிச்ச லுற்ருன். ஏனெனில், அவளை அவன் பார்க்கவில்லை; அந்தப் பெண்கள் தங்கள் உடம்பில் சில நாடாக்களைச் சுற்றிக்கொண்டு, தாங்கள் ஒழுங்காக ஆடை தரித்திருப்பதாக எண்ணினர்கள். அவர்கள் மட்டும் அவனுடைய மகள்களாக இருந்தால், அவன் அவர்களைச் சவுக்கால் விளாசியிருப்பான். "ஆ, நாசமாய்ப் போகிற தடிக் கழுதையே!’ ஆண்ட்ரோ குதிரையை அடிக்கத் திரும்பினன். பெருந்தேகி அம்மணமாய் ஒருக்களித்துப் படுத்திருப்பதைக் கண்டான். அவள் தன் கைகளைக் கன்னத்தின் கீழே வைத்து, ஒரு காலை மடக்கிக் கொண்டு படுத்திருந்தாள். வெயில்-கண்ணுடி அணிந்திருந்தாள். ஆண்ட்ரோ குதிரையை வெகு கடுமையாகக் கயிற்றினல் அடித்தான். ஆல்கோ தள்ளாடியது. மறுபடியும் உட்கார்ந்து விட்டது. அதன் தலை மேலும் கீழும் ஆடிக்கொண்டிருந்தது. முடிவில், அது அமைதியாக எழுந்து நின்று பெருமூச்சு விட்டது. அந்த அப்பாவிப் பிராணி வேர்வையால் நனைந் திருப்பதை ஆண்ட்ரோ கவனித்தான். அதன் பேரில் இரக்கம் கொண்டான். "ஐயோ பாவம்' என்ருன். பெண்கள் திரும்பவும் கலீரெனச் சிரித்தார்கள். இன்னெரு ஸ்திரீ இப்போது நன்கு தெரியும்படி பாறைமீது இருந்தாள். ஆண்ட்ரோ மேய்ச்சல் முளையைத் தரைக்குள் ஊன்றியபோது பெருந்தேகி ரொம்பவும் சிறிய சிவப்பு ஜட்டியும், அதற்கு இணையான மாாக்கச்சையும் அணிந்திருப்பதைக் கவனித்தான். அவள் ஒருக்களித்துப் படுத்திருந்தாள். அவள் கால் உருண்டு திரண்டு காணப்பட்டது. ஆண்ட்ரோ நகைத்தான். சொன்னன்: 'இதையும்தான் நீ ஏன் அணிகிருய்?’’ பிறகு, அவர்களைக் கடைசித் தடவையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவன் திடீரென்று தன் அப்பாவை நினைத் தான். அவர் அதே பாறைமீது அமர்ந்து, குடியானவர் களுக்கான முரட்டுக் காலணிகள் செய்வதற்காக, பதனிடப் படாத தோலைத் தண்ணிரில் ஊறவைப்பார். அந்த ஆற்றில் ஆட்டு ரோமங்களைச் சுத்தம் செய்த அம்மாவையும் நினைத் தான். அவள் கால்கள் மிக வெண்மையாகவும் மெலிந்தும் இருந்தன. அவன் அருகில் இருந்த ஒரு பாறையில் உட்கார்ந்து நீருடன் சேர்ந்து பாடுவான். ஒரு கணம் அவனுக்குச் சிரிக்க