பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 ஆகஸ்ட் துண்டுத் துணியால் துடைத்தார். இறுதியில் அந்தக் கைப் பிடியைத் தன் உள்ளங்கைகளால் வழுவழுப்பாக்கினர். அப்புறம் மகனைப் பார்த்துப் பெருமையோடு சொன்னர் : அது நல்ல ஆஷ் மரம். കൂ.ഒ് அளவு வயது வந்த ஒரு கிளையை நான் வெட்டினேன். தன் மகன் என்ன சொல்வான் என்று பார்க்க அவர் காத்திருந்தார். அவர் தன் வார்த்தைகளில் மிகுந்த பொருள் கலந்து கூறினர்போலும். அவர் பேச்சில் உள் அர்த்தம் ஏதேனும் இருந்திருக்கலாம். ஆனல், நினைத்துப் பார்க்கையில், ஒருவேளை அப்படி இல்லாமலும் இருக்கலாம். நிச்சயமாக, ஆஷ் மரக் கைப்பிடிதான். ஆனால், அவர் அந்தக் கிளையை வெட்டியபோது. 'நான் பிறகு அதைப் பார்க்கப் போனேன். ஆனல் அந்த மரம் அங்கே இல்லை.” அவர் தன் மகனை உற்று நோக்கியபோது திரும்பவும் வாயைப் பிளந்தார். பின்னர் அவர் எழுந்து, வெளிப்புற வீட்டுக்குப் போளுர், வழியில் குறுகலான தடத்தைவிட்டு விலகி நடந்தார். எதன் மீதோ மோதிக்கொண்டார். கால்சட்டைப் பொத்தான்களை விரல்களால் திருகியவாறு குனிந்தார்.

  • அன்ட்ரானிக்!’’
  • என்ன?’ ’

'நீ ஏன் வேலை செய்யவில்லை??? 'நீ யார், எங்கள் குழுத் தலைவரா, அம்மா?’’ "நீ சொல்வது கேட்கவில்லை, மகனே.” நான் வேலை செய்கிறேன் என்றேன். வேலை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.’’ { சரி, அன்பே, 梦梦 சூரியகாந்திப் பூக்கள் அமைதியாகச் சூரியனைப் பின் தொடர்ந்தன. தக்காளிச் செடிகளின் கீழிருந்த மண் தண்ணிரை உறிஞ்சியது. பீயர் மரத்திலிருந்து ஒரு பீயர் பழம் உதிர்ந்து விழுந்தது. ஒரு கருவண்டின் கனத்த ரீங்காரம் தேனித் தோட்டத்தின் சலிப்பான இரைச்சலில் குறுக்கிட்டது. பள்ளித் தலைவரின் மனைவி, இரண்டு வெற்று வாளிகளைத் தூக்கிக் கொண்டு பாதையில் தோன்றினுள். நீரூற்றை நோக்கி மென்மையாக ஆடி அசைந்தவாறு நகர்ந்தாள். அவளது பளிச் சென்ற மேலங்கியின் விளிம்பு, அசைவுக்கேற்பத் திறந்து விலகும் போது அவள் முழங்காலை வெளிப்படுத்தியது: மூடிக்கொண்ட