பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹரான்ட் மாடவோசியன் 盟”器 இரு. நான் உதவி செய்கிறேன்’ எனக் கூறி ஜிக்கோர் அவளே நோக்கி அடி எடுத்து வைத்தான். அவள் பதில் சொல்லவில்லை. ஆனல், முதலில் ஒரு கையையும், பிறகு ஒரு கால் மூட்டையும் தரையிலிருந்து உயர்த்தி மெதுவாக நிமிர்ந்தாள். அப்படி அவள் நிமிர்ந்து எழத்தொடங்கியதும், ரத்தமேறிய அவள் முகத்தையும் கழுத்தில் விம்மிய ரத்த நாளங்களையும் ஆண்ட்ரோ பார்த்தான். இறுதியாக அவள் எழுந்து நின்றதும், "ஆ, நீ இன்னும் நல்ல பலத்தோடுதான் இருக்கிருய்' என்று அவன் சொன்னன். அவள் சுமையை முதுகில் நன்கு வசதியாகப் படியும்படி நகர்த்திக்கொண்டாள். அவளது வாடிய புன் சி ரி ப் ைப ஆண்ட்ரோ மீண்டும் கண்டான். பீயர் மரத்தருகில் உள்ள பாதையை அடைந்ததும் அவள் சொன்ன பதிலேயும் கேட்டான். "ஆமாம். நான் திடமாகத்தான் இருக்கிறேன்!” சுமை கிளைகளில் சிக்கியது. மரியம் தாழ்ந்து குனிந்தாள். கீழே விழுவதற்கிருந்தாள். ஆனால், பின்வாங்கி, மரத்தின் அடியில் செல்வதற்காகக் குனிந்துகொண்டாள். கிளைகள் நிமிர்ந்து பின்னே துள்ளியபோது, பழுத்த பீயர் பழங்கள் தரையில் விழத்தொடங்கின. 'நான் ஒரு பழம் எடுத்துக்கொள்ளலாமா?’ என்று அவள் கீழே குனிந்தாள். 'முட்டாள்! மரத்திலிருந்து ஒன்று பறித்துக்கொள். பார். அவை உன் வாயில் வந்து விழுகின்றன’’ என்று ஆண்ட்ரோ கத்தினன். அவள் தரையிலிருந்து ஒன்றைப் பொறுக்கிளுள். மரத்தி லிருந்து இன்னென்று பறித்தாள். அதிகப்படியாகச் சிரித்தாள். "அவள் ரொம்ப நல்ல பெண். இளமையாகவும் இருக் கிருள். வலிமையுள்ள இளம் பெண்’ என்று கிழ நரி ஜிக்கோர் சொன்னன். ஆண்ட்ரோவின் குதிரையை இரவல் கேட்க ஜிக்கோர் வந்திருந்தான். அவன் இரண்டு மூட்டை தானியத்தைக் காசாக்கி லிருந்து கொண்டு வரவேண்டும். சுமார் எண்பது கிலோதான் இருக்கும். அதிகமில்லை. அவன் குதிரை அதற்கு லாயக்கில்லே. அது ரொம்பவும் பயந்தது. ரஸ்தாவும் மோசமானது. அவன் இரவில் பயணம் செய்வான். அவனுடைய குதிரை மடத்தன மானது. அது வெறுமனே கால் தடுக்கிக் கீழேவிழும். அவனையும்