பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. சிமோனியன் # 81 ஆயினும், நிலைமை அதற்கு நேர்மாருனது என்று ஓயாது அது வற்புறுத்தியது. அதன் நிலைபேறு பகுத்தறிவின் எந்த ஒரு அளவுக்கும் கட்டுப்படவில்லை. ஆனலும், எப்படியோ அது உண்மையாக இருந்தது. ..இப்போது அவன் முன் அறைக்குள் நடப்பான். அங்குத் தரையில் பரப்பியிருந்த பாய் அவன் காலடியில் சரசரக்கும். வானத்தின் இருண்ட நீலம் சன்னல் வழியாகத் தென்படும். ஆச்சர்யம்தான்! உலகம் இருண்டுவருகிற அதே கணத்தில் தான் அவன் ஒவ்வொரு முறையும் வீட்டினுள் நுழைகிருன். அது முதலில் கனத்த நீலத்தில் ஆழ்கிறது; பிறகு விசித்திரமான இருட்டில் மூழ்கிவிடுகிறது. இருட்டு, என்ன இருட்டு...! தூரத்தொலைவில் விட்டுவந்த நாட்டில்கூட இத்தகைய இருட்டைக் கற்பனை பண்ணுவது சாத்தியமாக இல்லை. அங்கே மிக ரம்மியமான சந்திரன் மலைகளின் அடுக்குகளினூடே நீந்தியது; அமைதியான ஏரியின் மோன அலைகளில் அது பிரதிபலித்தது. அது ஒரு அற்புதம்: ஒரு நாடு அல்ல! நெர்ஸஸ் மாஷன் முன்அறையில் ஆழ்ந்த மூச்சுயிர்த் தான். எங்கிருந்தாவது, பாயின் அடியிலிருந்து அல்லது சுவர்க் கடியாரத்தின் பின்னலிருந்து, அல்லது முகட்டிலிருந்து தொங்கிய விளக்கிலிருந்து, பயம் தனது உருவத்தை வெளிக்காட்டாமலே வந்து நிற்கும்; அது நாலாப் பக்கமிருந்தும் அவன்மீது கவியத் தொடங்கும்; பிறகு அவனுள் கலந்துவிடும். நெர்ஸஸ் மாஷன் அனிச்சையாக நடுக்கமுற்ருன். சிரிக்க முயன்ருன். எச்சரிக்கையாக நடுஅறைக் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே பார்த்தான். ஆனால் அடுத்த கணமே சமைய லறையை நோக்கித் திரும்பினன். அப்படிக் குதித்துத் திரும்பிய அவனது எதிர்பாராத அசைவுகளும், சிரிக்கும் முயற்சியும் சேர்ந்து ஒரு சோக சித்திரத்தையே உருவாக்கியிருக்கும். ஆளுல் சோகமான அல்லது உற்சாகம் நிறைந்த சித்திரங்களில் அவன் சிரத்தை காட்டவில்லை. ஒரு நாளாவது, ஒரு சாயங்கால நேர மாவது, தான் தன்னந்தனியாக இருப்பது சாத்தியப்படுமா? என்று அவன் அதிசயித்தான். முன் அறையின் சுவரில் சாய்ந்து, அவன் நிம்மதியாகப் பெரு மூச்சு விட்டான். தன் தலைக்கு மேலே கடியாரத்தின் ஊசல் அப்படியும் இப்படியும் சீராக அசைவதைக் கடைக்கண்ணுல் பார்த்தான்.