பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி. செய்துன்சியன் » 195 'நாற்பத்தாறு.” 5. "நாற்பத்தேழு ...” 'நாற்பத்தெட்டு...' 'நாற்பத்தொன்பது...” மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டதில், நாற்பத்தொன்பது வியப்படைந்ததாகத் தோன்றவில்லை. ஆரம்பத்திலிருந்தே அவன் அதுபற்றி நிச்சயம்கொண்டிருந்தான். அவன் ஒரு நாணயமான மனிதனுக இருந்ததால் அவன் சாக வேண்டாம். திடீரென்று அதிகாரியின் குரல் கேட்டது. 'நிறுத்து. ஒரு தவறு நேர்ந்திருக்கிறது. திரும்பவும் நாற்பதிலிருந்து எண்ணு...!’ - தவருகப் புரிந்துகொண்டதன் பயஞக. ஐம்பதாவது நபர் இடம் மாறி நாற்பத்தொன்பது ஆகியிருந்தான்: ஐம்பத் தொன்று ஐம்பது ஆகியிருந்தான். அதோ அப்படித்தான் அவை அமையவேண்டும்! அவன் சாகத்தான் வேண்டும். ஆரம்பம் முதலே அதை அவன் அறிவான். அவன் ஒரு யோக்கியமான மனிதனுக இருந்ததால், அவன் சாக வேண்டியதுதான்... முந்திய ஐம்பது-இப்போது ஐம்பத்து ஒன்று-மற்றவனே அறிந்தே இராதவன், வெட்கத்தால் முகம் சிவந்தான், அனைத்துக்கும் தன்னையே குற்றம் சாட்டவேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் முணுமுணுத்தான். 'நான்... நான் குற்றவாளி இல்லை...” ஆனல் அது மிகச் சிறியது. அதுகூடப் பொய்தான். அந்த நேரத்தில், மிகச் சாதாரணமான உண்மைகூட ஒரு குற்றமாய், அவனது அண்டையில் நின்றவனைப் பொறுத்தமட்டில் ஒரு ஏளனமாகவே தோன்றியது. அவன் இன்னும் ஏதோ முனகினன். இது மிகவும் உண்மை யானதாக ஒலித்தது. 'ஒருவேளை... ஒரு வேளை நான்கூடச் சாகத்தான் வேண்டும்... யுத்தத்திலிருந்து சொற்பப் பேர்களே திரும்புகிருர்கள்...” அதுதான் ஒரே ஒரு மகாப் பெரிய நியாயம் ஆயிற்று: "ஐம்பத்தாறு ...”* 'ஐம்பத்தேழு.”