பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxviii களையும் கருத்துக் குவியல்களையும் உருவாக்குகின்றன. இக் குறுநாவல், தன்னுணர்வு இயல்பையும் திட்டமிடும் அமைப் பையும் கொண்டிருக்கிறது. இருபதாம் நூற்ருண்டு ஆர்மேனிய வாழ்வுக்கே உரிய விசேஷப் பண்புகளைக்கொண்ட பாத்திரங்களை எம். கால்ஷோயன் படைத்திருக்கிருர். சர்வநாசத்தையும் சீரழிவையும், பிறந்த இடத்தின் சிதைவையும், நாட்டைவிட்டு வெளியேறலையும் கண்டவர்களை, புதிய குடியேற்றங்களில் புதியதோர் வாழ்வுக்கான அஸ்திவாரங்களை அமைத்த மக்களே, அவை பிரதிபலிக்கின்றன. ஆர்மேனியாவின் வரலாற்று ரீதியான நியதி, அழிவும் நாட்டை விட்டு வெளியேறலும், அவரது கதைப்பொருளாக அமைந் திருக்கிறது. தாய்நாட்டைவிட்டுத் தொலைதுாரப் பிரதேசங்களில் வசிக்கிற, அதே வேளையில் பிறந்த இடத்திற்கான ஏக்கத்தை உள்ளத்தில் கொண்டிருக்கிற மனிதர்களே அவருடைய கதாநாயகர்கள். ஆர்மேனியாவின் வரலாறு, அதன் சமீப இறந்த கால மற்றும் நிகழ்கால அம்சங்களோடு, அக் கதைமாந்தரின் விதியில் பிரதிபலிப்பதைக் காணலாம். மேற்கண்ட விஷயங்கள் எல்லாம், "டிஸோரியோ மிரோ' (பள்ளத்தாக்கில் மிர்), நடை பாதைப் பயணிகள்’’ எனும் குறுநாவல்களிலும், "அழைப்பு’’, * டாரஸ்மாமா’’ எனும் கதைகளிலும் வெற்றிகரமாக உருவகிக்கப்பட்டிருக்கின்றன. ஏ. ஐவாசியன், இன்றைய ஆர்மேனிய உரைநடையில் விசேஷமான கதாநாயக பிம்பங்களை உருவாக்கியிருக்கிரு.ர். அவருடைய குடும்பத்தின் தந்தை', "தலையாய எண்’’, 'விஞேர் மார்டிரோனின் சாகசச் செயல்கள்’’ ஆகிய புத்தகங் களில் உள்ள கதைகள், குறிப்பிட்ட சில ரசனபூர்வமான கொள்கைகளோடு வாழ்க்கையை எழுத்தில் சித்திரிக்கும் ஒரு ஆசிரியரை அறிமுகப்படுத்துகின்றன. 'திபிலிஸ்’ என்ற கதை அவருடைய "தலையாய எண்' எனும் புத்தகத்தில் இருப்ப தாகும். திபிலிஸ் நகரின் தன்மைகளும் அழகுத் தோற்றங்களும் 'திபிலிஸ் நகரின் பெயர்ப் பலகைகள்’, 'புனித உண்மை’. வானேவும் போலீஸ்காரனும்’ ஆகிய கதைகளிலும் தங்கள் சாயைகளைப் பதித்திருக்கின்றன. பி. செய்துன்சியனும் கே. சிமோனியனும் சுயத்தன்மை கொண்ட கலைப்பண்பை விசித்திர இயல்புடன் பெற்றிருக் கிருர்கள். அதனல், படைப்பாற்றலுக்குத் தளைகள் பூட்டுகிற, "அதீத கற்பனை விஷயங்களை எடுத்தாள்வதில் ஆர்வம் காட்டுகிருர்கள். இந்த விஷயங்களோடு, காலத்தின் வெவ்வேறு கட்டங்களுக்குரிய தனிப் பண்பாகத் திகழ்கிற படிமச் சின்னங்