பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxix களையும் இணைத்த படைப்புகளாக பி. செய்துன்சியனின் "கிளாட் ராபர்ட் இஸ்ரேலி’, மிகவும் வருத்தமான மனிதன்” ஆகிய குறுநாவல்கள் தனித்து நிற்கின்றன. நம் காலத்தின் இரண்டு மிகப் பெரிய துன்ப நிகழ்ச்சிகளின் கலாரீதியான சித்திரங்களை உண்மையின் அடிப்படையில் சிருஷ்டிப்பதன் வாயிலாக, இருபதாம் நூற்ருண்டின் மிகுந்த வகை மாதிரியான நிகழ்ச்சிகள் இரண்டை அவர் வர்ணிக்கிருர், ஒரு நிகழ்ச்சியில், இந்த நூற்ருண்டின் மிகப் பெரிய குற்றமான ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட செயல், 2,00,000 பேர்கள் மரணம் அடைந்தது, கதிரியக்கத்தால் உண்டான நோய்கள், அந்தக் குற்றத்தை அங்கீகரித்தது. அதை வெளிப்படுத்த எடுத்துக் கொண்ட பயங்கர முயற்சி எல்லாம் கையாளப்பட்டிருக்கின்றன. மற்ருெரு நிகழ்வில், ராபர்ட் ஸ்ட்ராடின் துயர அனுபவம், அவர் அரை நூற்ருண்டுக் காலம் சிறைப்பட்டிருந்தது, இழந்து விட்ட ஒரு வாழ்வு, அந்த இழப்பை மீண்டும் பெறல் ஆகியவை படைப்பாளி மனசின் விடாமுயற்சியில்ை ஒன்றிணைக்கப் படுகின்றன. கே. சிமோனியன் விஷயங்களையும் பொருளையும் அதீதக் கற்பனையுடன் சித்திரிப்பதில் ஆர்வம் காட்டுகிருர் என்று கூறலாம். ஆயினும், மனித வாழ்வை உருவாக்குகிற, மற்றும் சமூக நிலைபேற்றின் பண்பை விவரிக்கிற, தார்மீக, மனோதத்துவ அளவைகளிலிருந்து அவர் விலகி நிற்கவில்லை. இத் தன்மையில் அவரது மருத்துவர் நார்ஸஸ் மஷான்' என்ற நாவலும், மற்றும் அநேக குறுநாவல்களும் கதைகளும் குறிப்பிடத் தக்கவை. மிக அண்மைக்காலத்து ஆர்மேனிய உரைநடை, உண்மையில் இருபதாம் நூற்ருண்டு முழுவதையும் சார்ந்தது; வெகு பரவ லான உள்ளடக்கத்தைக்கொண்ட ஒரு வளமான சித்திரம் அது. இந்திய வாசகர்களுக்காகத் தொகுக்கப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் இருபதாம் நூற்ருண்டு ஆர்மேனிய உரைநடை யின் ஆதார சக்திகள், போக்குகள், சார்புகள் பற்றிய ஒரு நல்ல அறிமுக மாக விளங்குகிறது. இந்த முதல் தொடர்பு, இனி ஏற்படக்கூடிய நெருக்கமான சம உறவுகளுக்கும் பரஸ்பரம் அறிந்துகொள்ளு தலுக்கும் ஒரு பாலமாக அமையக்கூடும். அதற்கான உறுதிப் பாடும் இருக்கிறது: முதலாவதாக, இரண்டு நாட்டினருக் கிடையிலும் நிலைபெற்றிருக்கிற வளமான புராதன மரபுகள்; இரண்டாவதாக, இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கிற, மற்றும் சேர்க்கப்படாமல் விடுபட்டுமிருக்கிற, உரைநடை எழுத்தாளர்களால் படைக்கப்பெற்றுள்ள, செழுமையான,