பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாகன் டோடோவென்ட்ஸ்

35

புன்னகைக்கிறான் இவனையும் அவனையும் கட்டித் தழுவுகிறான். ஆனால், ஒன்றிரண்டு நிமிஷங்களுக்குப் பிறகு அந்த ஒட்டகம் முன்னுக்கும் பின்னுக்கும் ஆடி அசைகிறது; முட்டு மண்டியிடுகிறது; பிறகு உட்கார்ந்துவிடுகிறது. காவலன் சோகத்தில் ஆழ்ந்துபோகிறான்.

"என்ன பிடிவாதம் பிடித்த மிருகம்!" என்று அவர்கள் எல்லோரும் கூறுகிறார்கள்.

பனியின் முதல் விழுகை தரைமீது லேசாகத்தான் படிகிறது. ஆனாலும் அது எங்கள் கருநிற ஆடைகள் மீது படிகிறபோது, வெண்மைச் சிதறல்கள், மனிதக் கரங்கள் ஊசிகொண்டு செய்கிற பின்னல் வேலைகளைவிட முற்றிலும் நுண்மையான வேலைப்பாடுகளை உருவாக்குகின்றன.

நாங்கள் பனியைக் கவனிக்கிறோம். பேருவகை அடைகிறோம். ஆனால் பாலைவன மனிதன் அச்சத்தால் அவதியுறுகிறான்.

இவ் விசித்திரமான வெண்ணிறச் சிதறல்களை ஒட்டகம் பார்க்கிறது. ஒரு பெரிய பனித்தூவல் அதன் கண்ணிமைகள் மீது படியவும், அது தன் கண்களை மூடி, உணர்வுத் தடுமாற்றத்துடன் தலையை ஆட்டுகிறது.

காவலன், தனது போர்வையால் மூடுண்டு, ஒட்டகத்தின் முன்னே மண்டியிட்டு, முதல்முறையாக அழ ஆரம்பிக்கிறான், அருகே நிற்கும் நாங்கள் அவனுக்காகச் சிறிது ரொட்டி கொண்டு வந்திருக்கிறோம். அந்தப் பசித்த மனிதனோ இப்போது உணவில் கவனம் செலுத்தவில்லை.

பனிப்படலங்கள் இருந்தபோதிலும், கண்ணீர் அவன் இமைகளைச் சுட்டது. நீர்த்துளிகள் கண்களிலிருந்து ஆறாகப் பெருகி மூக்கின் இருபுறமாகவும் வழிந்து, அடர்ந்த மீசை தாடியினுள் மறைகின்றன. ஒட்டகம் ஆர்வத்தோடு தனது காவலனை உற்றுநோக்குகிறது; அவனுடைய கண்களின் ஆழத்துள் நோக்குகிறது; அவன் கண்ணீரைக் கவனிக்கிறது. அதே சமயம் காவலனின் ஈரம் படிந்த பார்வை அம் மிருகத்தின் கண்களைச் சந்தித்து, அவற்றின் ஆழத்துள் ஊடுருவிச் செல்கிறது. கண்ணீர் மேலும் மேலும் வழிந்து அவனது இமைகளைச் சுடுகிறது.

படபடக்கும் பனியினால் எங்களுக்கு ஏற்பட்ட சந்தோஷத்தோடு பாலை மனிதனின் துயரமும் இணைந்து கலக்கிறது.

திடீரென்று ஒட்டகம் தன் கழுத்தை முன்னே நீட்டுகிறது: இருவரின் மூச்சுகளும் இணைகின்றன. மன்றாடும் குரலில் அது சில