பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்செல் பாகுன்ட்

39

பாறைகளையோ இதற்கு முன்பு கண்டறியாதவர்கள் என்றும் கூறிவிடலாம்.

மூன்றாவது ஆள் அவர்களுடைய வழிகாட்டி. முதல் இரண்டு பேரும் தங்கள் குதிரைகளின் பிடரி மயிரைப் பற்றிக்கொண்டு, பாதுகாப்பாக இருப்பதற்காக ஒரேயடியாகக் குனிந்தபடி சவாரி செய்தார்கள். மூன்றாவது நபரோ சேணத்தில் ஆடி அசைந்த வேளையில் பாட்டு ஒன்றைப் பாடிக்கொண்டிருந்தான். அந்தப் பாடல் தூரத்துக் கிராமம்போல் துயரம் தேங்கியதாகத் தான் இருந்தது.

கோட்டையை மூடியிருந்த மேகங்கள் சில நேரங்களில் திரை விலகுவதுபோல் விலகின; சில சமயம் சுவர்களை வெளிக் காட்டின. கோட்டையின் சிகரங்களை அவை ஒருபோதும் மூடி மறைத்ததில்லை. முதல் நபர் சுவர்களிலிருந்து தனது கண்களை அகற்ற முடியாதவனாய்க் காணப்பட்டான். அவன் தன் மனக்கண் களில் கோட்டைபற்றிய கதைகளே-இளவரசர்கள் இங்கே ஆட்சிபுரிந்தபோது, போர் வீரர்கள் அமர்ந்த குதிரைகள் இரும்புக் கதவுக்கு வெளியே உள்ள பாதையில் நடந்து சென்ற போது, வீரர்கள் ஈட்டிகளே சுழற்றிக்கொண்டு முற்றுகைகளிலிருந்து திரும்பிய காலத்தில் தோல் காகிதங்களில் எழுதிவைத்த வரலாறுகள் பாதுகாத்த கதைகளை-காட்சிகளாகக் கண்டான். கண்ணாடிகள் வழியாகக் கூர்ந்து நோக்கிய கண்கள் ஒரு பண்டிதனின் கண்கள் ஆகும். போர்வீரர்களை, அவர்களது பிரதாபங்களைப் புகழ்ந்து பாடிய வரலாற்றுக்காரர்களை, அவர்களுடைய கூர்மையான எழுதுகோல் தோல் காகிதத்தின்மீது வார்த்தைகள் கிறுக்குவதை அவன் நிஜமாகவே காணமுடிந்தது. அந்தப் புராதனமான குதிரைகளின் கால்குளம்பு ஓசையை அவன் கேட்க முடிந்தது. முன்னாளில் கோட்டையில் வசித்தவர்கள் மலைவெள்ளாடுகள் மாதிரி வெகு சுலபமாக ஏறிச் சென்ற பாறைகள்மேலே சவாரி போவது அவனுக்கு எவ்வளவு சிரமமாக இருந்தது!

முடிவாக அவர்கள் கிராமத்தை அடைந்தார்கள். முதல் நபர் தன் வழியில் தொடர்ந்து சென்றான். அவன் பழைய பாதையைத் தேடிக் கொண்டிருந்தான். அவிந்த நெருப்பு மூட்டங்களின் சாம்பல் குவியலில் விளையாடிய குழந்தைகளையோ, வியப்புற்ற விழிகளால் அவனைத் தொடர்ந்து பார்த்த வெள்ளாடுகளையோ அவன் கவனிக்கவில்லை.

இரண்டாவது குதிரைக்காரன், ரோமத் தொப்பி அணிந்தவன், காகவபெர்தாவின் உச்சியில் கடந்த காலத்தைத் தேடிக்