பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

ஆல்ப் மலை வயலட் பூ

பூவையோ புல்லையோ கவனிக்கவில்லை. அவை எல்லாம் அவன் காலணிகளின் கீழே மிதிபட்டு நசுங்கின.

அவனுக்கு உலகம் முழுவதும் ஒரு மியூசியம் (பொருட்காட்சி சாலை) ஆகவே தோன்றியது. அதில் உயிருள்ள பொருள் ஒன்று கூடக் கிடையாது. பாறைகளை மூடிக்கிடந்த ஐவிக் கொடிகளை அவன் பிய்த்தெறிந்தான். வெடிப்பினூடே பூத்திருந்த வயலட் செடியைத் தன் கைக்கம்பின் நுனியினால் பிடுங்கி வீசினான். கற்கள் மீது ஆசையோடு கையால் தடவினான். அவற்றில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துகளில் அடைந்துகிடந்த புழுதியைச் சுரண்டி அகற்றினான். ஆய்வாளன் அக்கறை காட்டிய அனைத்தையும் வரைந்து முடிந்ததும், கலைஞன், இடிபாடுகளை, கரடுமுரடான பாறைகளுக்கிடையே இருந்த கழுகுக்கூட்டை, சுவரடியில் பூத்திருந்த வயலட்டை எல்லாம் வரையலானான்.

***

பிற்பகலில் அவர்கள் கோட்டையை வி ட் டு ப் புறப்பட்டார்கள். கீழ்நோக்கி இறங்குவதற்கு முன்பு ஆராய்ச்சியாளன் இடிபாடுகளை மீண்டும் ஒரு தடவை சுற்றிவந்து, தனது கையேட்டில் குறிப்புகள் எழுதிக்கொண்டான். பிறகு மற்றவர்களோடு சேர்ந்துகொள்வதற்காக அவன் வேகமாக நடந்தான்.

இம்முறை வழிகாட்டி முன்னே சென்றான். ஆய்வாளன் பாகுர் இளவரசனையும் வரலாறுகள் நிறைந்த தோல் காகிதச் சுருள்களையும் பற்றி எண்ணிக்கொண்டிருந்தான். கலைஞன் பாஸ்ட் ஆற்றின் கொந்தளிக்கும் நீரின் ஒசையைக் கேட்டவாறே வயலட் பூவை நினைவுகூர்ந்தான். வழிகாட்டியோ, வெள்ளாட்டின் பாலாடைக்கட்டியும் தயிரும் தோய்ந்த சூடான தோசையை எண்ணிக் கனவுகண்டான்.

முதல் குடிசையில் அவன் குதிரைகளை நிறுத்தினான். அவற்றை மேயும்படி விட்டுவிட்டு, அவன் குறுகிய வாசலினூடே புகுந்தான். பசியோடிருந்த குதிரைகள் புதிய புற்களை ஆசையோடு தின்னத் தொடங்கின.

குடிசைக்குள், வாயிலின் பக்கத்திலிருந்த அடுப்பருகே ஒரு சிறுவன் உட்கார்ந்திருந்தான். சூடான தீக் கங்குகளில் அவன் காளான்களை வறுத்துக்கொண்டிருந்தான். அந்நியன் வருகையால் அவன் திடுக்கிட்டான். காளான்களைக் கருகப்போட்டுவிட்டு ஒடுவதா? இல்லை, அவற்றை அனலிலிருந்து வெளியே எடுப்பதா? என்று அவனுக்குப் புரியவில்லை. அவன் அப்பா வரும் காலடி ஓசை கேட்டதும் அவன் துணிவுகொண்டான். வறுத்த காளான்