பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ö4 துரோகி பாம்பின் உள்ளத்தை இளகவைத்ததுபோலும். இப்போது அது மிகுந்த நட்பும் மென்மையும் கலந்த கண்களால் என்னைப் பார்த்தது. அதல்ை என் பயம் முழுவதும் கரைந்தது. இறுதியில், பாம்பு என் பக்கத்திலிருந்து விலகி, எட்ட இருந்த ஒரு மூலைக்கு ஊர்ந்துபோய், வெள்ளைக் கல் ஒன்றை தக்கத் தொடங்கியது. அது என்ன ரகமான கல் என்று எனக்குத் தெரியாது. ஆயினும், அடுத்து வந்த நாட்களிலும் பாம்பு அடிக்கடி அதை நக்கியது. நடுப்பகலில், பனிக்காலச் சூரியன் அதிக வெப்பத்தோடு இருக்கையில், பாம்பு தன் வாலின்மீது எழுந்து நின்று, சுவர்மீது வழுக்கி ஏறி, பொந்து வழியாக வெளியே பார்த்தது. அது எவ்வளவு நீளமாக இருந்தது என்று அப்போது நான் கண்டறிந் தேன். குழிக்கு மேலே இருந்த சில செடிகளைப் பிடித்தவாறு அது தன்னை வெளியே இழுத்துக்கொண்டது. நான் எழுந்து, வெளியேறுவதற்காக மீண்டும் பல தடவைகள் முயன்றேன். ஆளுல் வீணுக என்னே நானே சோர்வுறச் செய்ததுதான் கண்ட பலன். நம்பிக்கை இழந்து நான் பழையபடியும் மூலையில் உட்கார்ந்தேன். என் கண்கள் கலங்கின.

  • எக்கச்சக்கமான நிலையில் மாட்டிக்கொண்டேன். இதை விட அபத்தமான சாவு இருக்க முடியுமா?’ என்று எண்ணினேன். என் குழந்தைகளே நினைத்தேன். என் நெஞ்சு வலித்தது.

சிறிது நேரத்துக்குப் பிறகு, தலைக்கு மேலே சலசலப்புக் கேட்டது. பாம்பு, வாயில் ஒரு முயலைக் கவ்வியபடி, தலையை பொந்துக்குள் நீட்டுவதைப் பார்த்தேன். அது ஒரு செடியை வாயால் பற்றிக்கொண்டு தன்னைக் கீழே தாழ்த்தியது. அப்புறம்-நான் பொய் சொன்னல் அல்லா என்னைச் சாகடிப் பாராக-அது முயலே எனக்கு முன்னல் வைத்தது. முயலையும் என்னையும் மாறிமாறிப் பார்த்தவாறு இருந்தது. பாம்பு கோபம் கொண்டு, அங்கு யார் எஜமான் என்று எனக்குக் காட்ட முற்படலாம் என்ற பயத்தால் நான் அந்த முயலைத் தொடு வதற்குத் துணியவில்லை. ஆளுல், அது முயலின் பக்கமே வரவில்லை. வெறுமனே முயலைப் பார்த்தது; பிறகு என்னைப் பார்த்தது. எனக்கு எதையோ புரியவைக்க முயல்வதுபோல் அது அவ்வாறு தொடர்ந்து செய்தது. முடிவில் நான் முயலை எடுக்கத் துணிந்தேன். பாம்பு நகர வில்லை. பள்ளத்தின் தரைமீது காய்ந்த இலைகளும் சுள்ளிகளும் ஏராளமாகக் கிடந்தன. நான் அவற்றில் ஒரு குவியல் சேகரித்து,