பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாக்தாங் அனன்யன் 59 ஊர் சதுக்கத்தை அடைந்ததும் அவர்கள் தங்கள் சுமைகளைக் கீழே வைத்தார்கள்: பெட்டிகளையும் கூண்டையும் திறந்தார்கள். ஒரு கம்பளத்தைப் பரப்பி, கூண்டை அதன்மீது கவிழ்த்தார்கள். சமுக்காளத்தில் ஏகப்பட்ட பாம்புகள் ஒன்றன்மீது ஒன்று ஏறி நெளிவதைப் பார்த்ததும் பெண்கள் கூச்சலிட்டனர்; குழந்தைகள் உற்சாகத்தோடு கத்தின. அந்தப் பாம்புகளே எல்லாம் பார்க்கவேண்டுமே! ஒரு பாறைத்துண்டு போன்ற நிறமுடைய ஒரு வகைப் பாம்பு; பிரமாண்டமான உடலும் தட்டையான பெரிய தலையும் கொண்ட குர்ஜாப் பாம்பு அகன்ற வாய் உள்ள கன்னங்கரிய விஷப்பாம்பு; பிரகாசமான ஷக்மார்; முடிக்கொம்புப் பாம்பு; மற்றும் அநேக வகைகள். சந்நியாசிகள் குழல் ஊதிக் கொட்டு அடித்தார்கள். பாம்புகள் தங்கள் வால்களில் எழுந்து நின்று நாட்டியம் ஆடுவது போல் வேடிக்கையாக அசைந்து நெளிந்தன. மற்ருெரு சந்நியாசி தனது அச்சமின்மையை விளம்பரப் படுத்திக்கொண்டிருந்தான். பாம்புகளில் மிகுந்த விஷமுள்ள ஒன்றை-ஒரு விரியனே-எடுத்து, அதைத் தன் மார்பின்மேல் அவன் போட்டுக்கொண்டான்; பாம்பு சந்நியாசியின் உடம்பில் ஊர்ந்து, சட்டைக்குள் புகுந்து, கால்சட்டையினுள் மறைந்து, பிறகு திடீரென்று உடுப்பில் காணப்பட்ட ஒரு ஒட்டையின் வழியாக, அல்லது திறந்த கழுத்துப்பட்டை வழியாக எட்டிப் பார்க்கும். அப்புறம் அவன் வேருெரு பாம்பை எடுத்து, அதன் தலையைத் தன் வாய்க்குள் வைத்தான். பெண்கள் அலறினர். சந்நியாசியோ அமைதியாகச் சிரித்து, தனது தாடியைத் தடவினன். குடியானவர்களில் ஒருவன் சொன்னன் : "இதில் எல்லாம் ஒன்றுமே இல்லை. அதன் பல்லை அவர்கள் பிடுங்கிவிட்டார்கள். அதற்கு இப்போது விஷமே இல்லை. எனது கிழத் தாத்தாகூட இப்படிப்பட்ட ஒரு பாம்பைத் தன் வாய்க்குள் திணிப்பதற்குத் தயங்கமாட்டார்.” 'மாட்டாரா? நல்லது. இதுக்கு விஷம் கிடையாது என்று நீ எண்ணினால், இங்கே ஒரு கோழிக்குஞ்சு கொண்டுவா’ என்று சந்நியாசி கூறினன். அந்த விவசாயி தன் பேச்சை வாபஸ் பெறத் தயாராக இல்லை. அவன் ஒரு சேவலைக் கொண்டுவந்து, பாம்பின் முன்னுல் வைத்தான்.