உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

கமலங்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன.

வா.கு. 248 கு.248

யான் பொய்கை நடுவண் நின்றேன்; மெல்ல மெல்ல

நீந்தியே வந்தேன். மாணாக்கர் கூட்டம் வீட்டுவரை

தொடர்ந்தது.

(கமலங்கள் - மாணவர்கள்;கூட்டம் - பொய்கை)

எச்ச இணைப்பு நடை

பழந்தமிழன் உலகம் உலகம் என்றே நினைத்து, என்றே பேசி, என்றே செயலாற்றினான். (என்று -எச்சம்).

எதுகை நடை

அந்நாள் எந்நாள்?

ம.வா.கா.அ:14

வாட்டம் தீர்த்து மீண்டும் தோட்டம் நோக்கினேன்.

வா.கு:708

பாலர் சொற்பொழிவு எனக்கு விற்பொழிவாகவும்

தோன்றியது.

வா.கு. 252

துட்டுவந்து அவர்பெட்டி நிரம்புகிறதேயன்றித் திட்டு அவரை ஒன்றும் செய்யவில்லை.வா.

கு:358

எதுகைவழி, முரண்நடை

ஒலிபெருக்கி பாலரைக் கண்டிருப்பின் அஃது ஒலி

சுருக்கியாய் ஒடுங்கும்.

வா.கு: 252

கலைநாடு கொலை நாடாகியது; சைநா

நாடு வசை

நாடாகியது.

த.தெ.426

(வழி மீண்டும் வருதல்; முரண் எதிரிடை).

-