பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68 2. பொருத்தமான பதப்படுத்தும் பயிற்சிகள் நடத்தல்; மெது ஒட்டம் ஒடுதல்; விரைவாக ஓடுதல், துள்ளிக் குதித்துக் கைகளை இருபுறமும் விரைவாக ஆட்டிக் கொண்டு ஓடுதல், அசைத்தல். கீழே அமர்ந்து, கால்களை நீட்டிக்குனிந்து பாதங்களைத் தொடுதல். ஒரு காலை நீட்டி, ஒரு காலை மடக்கிக், குனிந்து இரு கையாலும் தொடுதல், மல்லாந்து படுத்து; சர்வாங்காசனம் போல் கால்களை செங்குத்தாக உயர்த்தி, சைக்கிள் ஒட்டுவதுபோல் கால்களை கழற்றுதல். 3. நண்திறனைக் கற்பித்தல் நீளத் தாண்டலுக்கு 4 பிரிவுகள் உள்ளன. 1. மிதித்தெழும் பலகையை நோக்கி ஓடி வருதல். (Approach) 2. விரைவாக, அழுத்தி பலகையை மிதித்து உயர்தல் (Take off) 3. &m si soldi sol-3,456 (Walking in the air) 4. மணற்பரப்பில் காலூன்றுதல் (Landing) குறிப்பு : 1. மிதித்தெழும் கால் எது என்று அறிய வைத்தல். 2. மிதித்தெழும் பலகைக்கு வேகமாக ஓடிவரும் அணுகு முறையைக் கற்பித்தல். 3. காற்றில் நடக்கும், சாமர்த்தியத்தைக் கற்றுத். தருதல். 4. குதிகால்கள் மணற்பரப்பில் முதலில் ஊன்றுமாறு, குதித்தல்.