பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கடடுபபாடும்

62



இறைக்கின்ற நீர் நெல்லுக்குப் போனால் லாபம். புல்லுக்குப் போனால் எப்படி ? இதயம் இறைக்கின்ற இரத்தம் வேண்டாத சதைகளுக்கெல்லாம் போவ தென்றால், வீண் உழைப்புத்தானே.

இதனால் ஊளைச்சதை உள்ளவர்களுக்கு அதிக இரத்த நோய் உண்டாகிறது. அதனால் இதயத்தில் வலியும் கூட ஏற்படுகிறது.

ஒவ்வொரு பவுண்டு கொழுப்புத் திசுக்கள் உடம்பில் கூடக் கூட, முக்கால் மைல் நீள அளவுக்கு இரத்தக் குழாய்கள் நீண்டு இரத்தத்தை இறைத்திடும் பணியில் ஈடுபடுகின்றன என்றால், இதயம் ஏன் வேதனை அடையாது!

3. கல்லீரல் : தன் பணியை செய்ய முடியாமல் கஷ்டப் படுகிறது. இதில் சுரக்கும் பித்தநீர் எளிதில் உணவினை ஜீரணம் செய்ய இயலாமற் போய் பாதிக்கப்படுவதால்,பலவித நோய்கள் பிறந்திட ஏதுவாகின்றன.

4. நீரிழிவு நோய் : உடலில் இன்சுலின் சக்தி சுரக்காமல், சர்க்கரைச் சத்து தேகத்தில் தேங்கிப் போவது, அத்தகைய சூழ்நிலையை ஊளைச் சதை எளிதாகத் தோற்றுவித்து விடுகிறது.

5. இதனைத் தொடர்ந்து கண்களுக்கு வரும் இரத்தத் தந்துகிகள் பாதிக்கப்பட்டு, நரம்புகளைப் பாதிக்கும்.

6. சிறுநீரகம் : (Kidney) பாதிக்கப்படும்.

7. ஜீரண உறுப்புக்கள் சரிவர செயல்படாமல், ஜீரண பாதிப்பு நோய்கள் உண்டாகும்.