பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

64




ஊளைச்சதையுள்ளவர்கள் மற்றவர்களைப் போல் சுறுசுறுப்பாக இயங்க முடியாது. இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்புளிக்க என்று கம்பர் பாடும் காட்சி தான்.அவர்கள் (நடந்து) அசைந்து செல்லும் அழகு.

ஒரடி, ஈரடி கொஞ்சம் வேகமாக எடுத்து வைத்தால் கூட, அவர்களுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு கிளம்பும். அவர்களது உடல் சமநிலை கூட சரியாக இராது.

கொஞ்சம் நிலை மாறினால் தவறி கீழே விழும் வாய்ப்பு நேரிடும்.

சாதாரண மனிதர்களை விட இவர்கள் எதையும் மிகவும் மெதுவாகவும் தாமதமாகவும் செய்வார்கள்.

இதை மாற்ற கொஞ்சம் உடலுழைப்பு செய்யுங்கள் என்று அறிவுறுத்தி செய்ய முனைந்தாலும், அந்த உழைப்பின் அழைப்பை அவர்கள் தாங்கிக் கொள்ள இயலாத தேகநிலையை அடைந்து விடுகின்றார்கள்.

இவர்கள் வேகமாக காரிய மாற்ற முயலும் பொழுது, முடியாமற் போவதுடன் விபத்துக்கும் ஆளாகின்ற சூழ்நிலை அமைந்து விடுகிறது.

மேலும், நாம் முன்னர் கூறியது போல, ஊளைச் சதையுள்ளவர்கள், தொள தொளவென்று தோன்றுகின்றார்களே தவிர, அழகாகக் காட்சியளிக்க முடியவே முடியாது.

ஊளைச்சதையுள்ளவர்களின் தோலின் மேற்புறம் ஏற்படும் வரிவரியான மடிப்புகளின் தோற்றம், அவர்கள் வற்றிப் போன பிறகும் மறைந்து போவதில்லை.