பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




ஆகவே, உடலுக்கும் சில சமயங்களில் உயிருக்கும் உபாதை ஏற்படுத்துகின்ற இந்த ஊளைச்சதையை அகற்றித் தானே தீரவேண்டும். முயன்றால் உலகில் முடியாதது இருக்கிறதா என்ன?

சதைகளைக் குறைத்து விடுவோம் என்று மனம் விரும்புவது உண்மைதான். ஆனால், நடைமுறைப்படுத்தும் பொழுது நாலாவிதமான துன்பங்களும் துயரங்களும் தாக்கும். முயற்சிகளைத் தகர்க்குமே!

விட்டு விடுவோமா என்று நினைவுகளும் நெருக்கும். இருந்து விட்டுப் போகிறதே என்ற திருப்தியில் கூட நடக்க வைக்கும்.

இப்படிப்பட்ட பலதரப்பட்ட சூழ்நிலைகளை, தள்ளாத உடலும் தாங்காத மனமும் சேர்ந்து செயலிழக்கச் செய்ய முயற்சிக்கும்.

அதற்கு இடங்கொடுத்தால், அனைத்துக்கும் ஆபத்து என்கிற முறையிலே, வேண்டாத சதைகளை விரட்டியடிக்கும் முயற்சியே இலட்சிய முயற்சி என்று உறுதியுடன் ஈடுபட வேண்டும்.

இனி, ஊளைச் சதைகளை, மிகுதியான உடல் கனத்தை எப்படி விரட்டுவது, வெற்றி பெறுவது என்கிற விஞ்ஞான முறைகளை காண்போம்.