பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7. வாத்திகன் நகரம் வாத்திகன் (Vatican) என்ற சொல் கிறித்தவர் களுக்கு ஒரு மந்திரச் சொல். ஓர் இந்து காசி நகரை எவ்வாறு ஒரு புனிதமான இடமாகக் கருதுகின் ருனே, ஓர் இசுலாமியன் மக்காவை எவ்வாறு ஒரு புனிதமான இடமாகக் கருதுகிருனே, அதுபோல ஒவ்வொரு கத்தோலிக்கக் கிறித்தவனும் வாத்தி கன் நகரைக் கருதுகிருன். ஓர் இந்து காசி நகரை யும், ஓர் இசுலாமியன் மக்கா நகரையும் தன் வாழ் நாளில் ஒரு முறை கானுவதைக் கிடைத்தற்கரிய பெரும் பேருகக் கருதுவதைப்போல, ஒவ்வொரு கத்தோலிக்கக் கிறித்தவனும், தன்னுடைய வாழ் நாளில் ஒரு முறையாவது வாத்திகன் நகரைக் காண விரும்புகிருன். காரணம், கிறித்தவ சமயத் தின் இரண்டாயிரம் ஆண்டு வளர்ச்சியும், வர லாறும் இவ்வாத்திகன் நகரத்தோடு பிரிக்க முடியாதபடி பின்னிப் படர்ந்து கிடக்கின்றன. போப்பாண்டவரின் தலைமைப் பீடம் இந்நகரமே. உலகிலேயே மிகப் பெரிய கிறித்தவக் கோயிலான புனித பீட்டர் தேவாலயமும், மிகப் பெரிய மாளிகை யான போப்பாண்டவர் மாளிகையும் வாத்திகன் நகரில் இருக்கின்றன. உலகில் வாழும் ஐம்பது கோடிக் கத்தோலிக்கரின் உள்ளங்களும் இந்நகரின் எல்லைக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன. வாத்திகன் வரலாறு வாத்திகன் உரோம் நகரின் ஒரு பகுதி. வாத்தி கன் என்ற மலையின்மேல் இச்சிறு நகரம் அமைந்