பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42 பெரும் பாறைகளைக் கையாளுவதில் அவர்கள் மிக்க திறமை பெற்றிருந்தனர். பிரமிடுகளில் பயன் படுத்தப்பட்ட கற்களைவிட மிகவும் பளுவான கற். களைக் கோவில்கள் கட்டுவதில் பயன்படுத்தினர். கோவில்களின் மேற் கூரையாகப் பயன்படுத்தப் பட்ட கற்களும், கோவில்களின் முன்னல் சிற்பக் கலையழகோடு நாட்டப்பட்டிருக்கும் உயர்ந்த தூண் களும், கோவிலின் வாயிலை அலங்கரிக்கும் கண் கவர் சிற்பங்களும் நூற்றுக்கணக்கான டன் எடை யுள்ளவை. பாரோ மன்னர்கள், பிரமிடுக்குள் பிணங்களைப் புதைக்கும்போது அளவற்ற செல்வத்தையும் உடன் வைத்துப் புதைத்தனர் எனக் கண்டோம். இப்பழக்கம் பின் நாட்களில் பெருந் தீமையாக முடிந்தது. செல்வத்திற்கு ஆசைப்பட்ட கள்வர் கள், பிரமிடுகளின் வழிகளே உடைத்து உள்ளே நுழைந்து களவாடத் தொடங்கினர். இதை அறிந்த பாரோ மன்னர்கள் பிரமிடைப் பெரிய அள வில் கட்டுவதைவிடச் சிறியதாகவும், எளிதில் வழி யைக் கண்டறிய முடியாதபடி நுட்பமான கட்டடக் கலைத்திறனேடு அமைந்ததாகவும் கட்டத் தொடங் கினர். இச்செயலால், திருடர்களை வேண்டுமானுல் தடுக்கலாம். ஆனல், அப்பிரமிடுகளை எழுப்பிய சிற்பிகளை எவ்வாறு தடுக்கமுடியும்? கட்டட நுட்பம் தெரிந்த சிற்பிகளே பிரமிடுகளைக் கொள்ளை யடிக்கத் தொடங்கினர். இவ்வுண்மையை அறிந்த பாரோ மன்னர்கள் புதியதொரு வழியைப் பின்பற்றத் தொடங்கினர்;