பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



          “முள்ளினை முள்ளைக் கொண்டே
          முறியாமல் களைத லொன்று,
          கள்ளனைக் கள்ளற் கொண்டே
          கண்டுகைப் பற்ற லொன்று;
          தள்ளுவோ ரில்லை யேனும்,
          தக்கநற் செயல்க ளுக்குத்
          தெள்ளியோ ரிவ்வு பாயம்
          தேர்ந்திடார்” என்றான், நந்தன்.

          'கலகல' எனந கைத்துக்
          கடிந்திது சொல்வான்: “நந்தா!
          பலபல நூல்கள் கற்ற
          பண்டிதன் கெளடில் யன்தான்
          'நிலவுல காள்வோர் செல்வம்
          நெறியிது சேர்க்க' என்றான்.
          நலமல என்று நீயும்
          நாடாது மறுக்கின் றாயால்.

          கறுப்பிது சிவப்பி தென்று
          கண்கொண்டு காணா முன்னே
          மறுப்பது செய்தாய், நந்தா!
          மதிக்கிறேன் உன்னை; ஆனால்.
          பொறுப்பதற் கில்லை; இன்ரே
          பொருந்திடும் நல்ல யுக்தி
          வெறுப்பது விளைவ தற்குள்
          வேறு நீ கூறாப்,” என்றே.

24