பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          கொழுந்துவிட் டெரிய வந்த
          கோபத்தைக் குறைத்துக் கொண்டே,
          அழுந்திய பசிவ யிற்றை;
          அடிக்கடி கிள்ள வேதான்
          எழுந்தனன் கவிஞன் மெல்ல;
          இதைக்கண்ட நந்தன், இன்புற்
          றிழந்ததன் செல்வம் மீண்டும்
          எய்தினால் எனவே நின்று,

          "'எப்பொருள் எத்தன் மைத்தாய்
          இருப்பினும் இதய மார
          அப்பொருள் தன்னில் உள்ள
          அரும்பொருள் அறிக' வென்றே
          செப்பிய வள்ளு வன்சொல்
          சிங்தையில் எழவே மாற்றம்
          இப்பொழு துரைத்தேன்; குற்றம்
          எனின்இது பொறுப்பீர்!” என்றான்.

          கதிரவன் மறைவும்,
          கவிஞன் நுகர்ச்சியும்
          அரும்பெரும் கவிஞன் ஏதும்
          அருந்தாமல் இருத்தல் கண்டும்,
          பரம்பரை யாகக் காக்கும்
          பார்மகள் பரிவு குன்றி
          இரும்பன நெஞ்ச ளாகி
          இருந்தனள், கெட்டா ளென்று
          பெரும்பகை கொண்டு வெய்யோன்
          பிரிந்தனன், எனம றைந்தான்.

25