பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          கவிஞன் அவளை அழைத்தல்
          ஒழுக்கமே உருவ மாகி,
          உண்மையே பெண்மை யாகி,
          இழுக்கமின் றெய்தப் பல்வே
          றின்னலுக் குறையு ளாகி,
          வழக்கமாய் வழியி லென்றும்
          வருபவள், அன்றும் வந்தாள்;
          பழக்கமே இலையென் றாலும்
          பாவலன் வரவ ழைப்பான்.

          நல்லவர் கண்ணில் பட்டோர்
          நலமுறல் உண்மை யென்றும்,
          அல்லவர் கண்ணில் பட்டோர்
          அலமரல் தப்பா தென்றும்
          சொல்லுவார் கண்ணுக் கன்றிச்
          சுயமான மேற்கோ ளொன்று
          பல்லவர் கண்ணுக் கும்தென்
          பட்டது போலும் அம்மா!

          'கங்கைதான்' எனவே நெஞ்சில்
          கருணைதான் பெருக நின்று,
          “தங்கையே" என்ற சொல்லில்
          தாயன்பு வடியக் கேட்டே,
          அங்கையில் கஞ்சிச் செப்பும்,
          அகத்தினில் பணிவும் தாங்கி
          நங்கையும் நின்றாள், கண்டாள்;
          நடந்து தான் அருகில் வந்தாள்.

34