பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

காற்றில் வந்த கவிதை

யைத் தேடி வந்து அவளே அடிக்கிறான். பக்கத்து வீட்டுக்காரர் சமாதானம் செய்கிறார்கள். இதற்குள்ளே இரவு வெகுநேரம் ஆகிவிடுகிறது. எல்லோருக்கும் உறக்கமும் வந்துவிடுகிறது. அதனல் படுத்துத் தூங்கச் சென்று விடுகிறார்கள்.

புருஷன்வந்து பார்த்தானாம்
சாற்றுச்சட்டியைப் பார்த்தானாம்
சாற்றுச்சட்டியைப் பார்த்தபோது
சாறுமட்டும் இருந்ததாம்
கண்டம்ஒன்றும் இல்லையாம்
கடுங்கோபம் அங்கேவந்ததாம்
கோபமாகப் போனானாம்
குடுமியைப்பிடித்து இழுத்தாளும்
நாலுபேரும் பார்க்கப்பார்க்க
நாலுகுத்து வைத்தானாம்
பக்கத்தார்கள் குறுக்கே வந்து
பஞ்சாயத்தும் செய்தார்கள்
பஞ்சாயத்து முடிந்ததும்
படுத்துறங்கச் சென்றார்கள்.

ராட்டைப் பாட்டு நீளமான ஒரு நாடோடிப் பாடல் வேடிக்கையானது. இதைப் பாடிக்கொண்டே ஒயில் கும்மி அடிப்பதுண்டு.