உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஒயில் கும்மி




உழவர்கள் வாழும் கொங்கு நாட்டு ஊர்களிலே நடை பெறும் பொங்கல் விழாவிலே ஒயில் கும்பி ஒரு சிறப்பான இடம் பெறுகிறது. ஒயில் என்றால் அழகு என்று பொருள். பலவகையான சந்தங்களுக்கு ஏற்றவாறு ஒயிலாக ஆடிக் கும்மி அடிப்பதால் இதற்கு ஒயில் கும்மி என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.

சாதாரணமாகப் பெண்கள்தான் கும்.மியடிப்பார்கள். கும்மி அவர்களுக்காகவே ஏற்பட்டது என்றுகூடக் கூறலாம். ஆனல், ஒயில் கும்மி பெண்கள் அடிப்பதல்ல. ஆடவர்கள் ஆடிப்பாடி நடிக்கும் ஆட்டம் அது.

எதிர் எதிராக இரண்டு வரிசைகளில் இளங்காளைகள் நின்றுகொள்ளுவார்கள். வரிசைக்குச் சுமார் பத்து அல்லது பன்னிரண்டு பேர் இருப்பார்கள். அவர்கள் தலையிலே நல்ல குஞ்சம் விட்டு அழகாகக் கட்டிய உருமாலைகள் விளங்கும். கையிலே ஒரு சிறிய கைக்குட்டையும் இருக்கும். கைக் குட்டைகளை லாகவமாக வீசிக்கொண்டு அந்தக் காளைகள் பாட்டின் சந்தத்திற்கேற்றவாறு ஆடுவார்கள். பரதநாட்