பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


126 காற்றில் வந்த கவிதை கிருள். அதைக் கூறும் நாடோடிப் பாடலிலே தாயின் அன்புள்ளம் இனிமையான இசையிலே வெளியாவதைக் காணலாம். மலையோரம்-மகனே போகாதேடா மலை நாகம்-மகனே தீண்டிடுமே செடியோரம்-மகனே போகாதேடா செடி நாகம்-மகனே தீண்டிடுமே கல்லோரம்-மகனே போகாதேடா கல் நாகம்-மகனே தீண்டிடுமே புத்தோரம்-மகனே போகாதேடா புத்து நாகம்-மகனே தீண்டிடுமே