பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

145

மதுரைச் சொக்கர்




ருமையாக ஒரு பொருள் கிடைத்தால் அதைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது. அதைப் பார்த்துப் பார்த்து உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது. தான் மட்டும் இவ்வாறு இன்பம் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றுகிற ஆசை ஒரு வகை.

தனக்கு மிக விருப்பமானதைத் தன் அன்புக்குப் பாத்திர மாணவர்களுக்குக் கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியடைவதைப் பார்த்து உள்ளம் பூரிப்பது மற்றொரு வகையான ஆசை.

தாய்க்கு ஒரு நல்ல மாம்பழம் கிடைக்கிறது. அதை அவளே உண்ண விரும்புவதில்லை. குழந்தைக்குக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.

சிறுவன் தனக்குக் கிடைத்த விளையாட்டுக் கருவியைத் தன் தோழனுக்குக் கொடுக்க விரும்புகிறான்.

காதலன் தன் காதலியை நினைக்கிறான். அவளுடைய மகிழ்ச்சியிலே அவன் பெரியதோர் இன்பங் காண்கிறான். தனக்கு அருமையாகத் தோன்றுகின்றவற்றையெல்லாம்

10