பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

காற்றில் வந்த கவிதை

தடுத்து, "நீங்கள் ஊரைவிட்டுப் போக வேண்டாம். சீக்கிரம் மழை பெய்து நாடு செழித்துவிடும். பயப்படாதீர்கள். அதுவரை வேண்டுமாளுல் நாங்கள் சேமித்து வைத்துள்ள தானியங்களை உங்களுக்குக் கொடுக்கிருேம். சேரைப் பிரித்துத் தாராளமாகத் தானியம் வழங்குகிருேம். ஊரைவிட்டுப் போகாதீர்கள்" என்று நல்ல வார்த்தை சொல்லுவது போலப் பின்வரும் பாடலைப் பாடுவார்கள்.

சேரைப் பிரிச்சுத்தாரேன் சிராட்டுப் போவாதீங்கோ
குத்தாரி பிரிச்சுமக்குக் கூடைத்தவசம் நான்தாரேன்
சீமை செழித்துவிடும் செல்லமழை பேஞ்சுவிடும்
நாடு செழித்துவிடும் நல்ல மழை பேஞ்சுவிடும்

இப்படிப் பாடுகின்ற சமயத்திலே பெய்துவிடுமாம். மழைக் கஞ்சி எடுத்தால் நிச்சயம் மழை பெய்தே தீரும் என்று கிராமத்து மக்கள் சொல்லுகிரு.ர்கள். எல்லோரும் பரிந்து கேட்கிறபோது வருண தேவனுக்குத்தான் இரக்கம் உண்டாகாமலா போய்விடும்?