பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

கலப்பை மட்டுமா பொன்னல் செய்யப்பட்டிருக்கிறது? கலப்பையில் நீளமான சட்டம் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். அதற்குக் கருவத்தடி என்று பெயர். அதன் ஒரு கோடியில் உழுகின்ற கலப்பையிருக்கும்; மற்ருெரு கோடியில் நுகத்தடியைக் கயிற்ருல் கட்டி அதில் மாடுகளைப் பூட்டுவார்கள். கருவத்தடியும் பொன்னல் ஆனது: துகத்தடியும் பொன்னல் ஆனது; பிரிக் கயிறும் பொன்னல் திரிக்கப் பட்டது. இவற்றை எல்லாம் எடுத்து வரும்படி உழவன் கூவுகிறான்.

அவனுடைய உற்சாகம் இன்னும் பொங்குகிறது. "பொன்னாலே செய்த கூடைகளே எடுத்து வாருங்கள். பொன்னை மாடுகளை ஒட்டிக்கொண்டு வாருங்கள்" என்று மேலும் சொல்லுகிருன். மாடுகள் உழவனுக்குப் பொன்னே போன்றவை. அவைதான் அவனுடைய பெரிய உடைமை.

கலப்பை, கூடை, மாடுகள் ஆகிய இவை மட்டும் போதுமா? உழுது சேறு கலக்கிப் பூமியை நலம் செய்து விதைப்பதற்கு நெல் வேண்டாமா? உழவன் நெல்லெடுத்து வர ஆணையிடுகிருன். அன்னச் சம்பா, அழகு சம்பா, சின்னச் சம்பா, சீரகச் சம்பா, முத்துச் ச.ம்பா, மிளகு சம்பா இப் படிப் பலவகையான நெல் மணிகளை எடுத்து வரவேண்டும் என்பது அவன் ஆணை.

உழவன் யானை கட்டிச் சேறு கலக்குவாளும்; குதிரை கட்டிச் சேறு கலக்குவாளும். இப்படிச் செய்து நெல் விதைத்து வெள்ளிங்கிரி என்ற மலைப்பகுதியிலிருக்கும் சோலையிலே விதவிதமான நெல் விளையச் செய்வானாம்.

மழை பெய்துவிட்டால் உழவனுக்கு உண்டாகும் மகிழ்ச்சியைப் பார்த்தீர்களா? இந்த மகிழ்ச்சியை ஒரு பாட்டு அழகாகக் கூறுகின்றது. வயல் வெளியிலே மிதந்து வந்த பாட்டு அது. தேவேந்திரப் பள்ளனை நோக்கிக் கூறியதாகப் பாட்டு வருகிறது: